சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந் நிலையில், சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் கிளிநொச்சி காணாமல் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகத்தில் எளிமையான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, மெழுகுதிரி ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக இந் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் காணாமல் போன ஆட்கள் பற்றிய கிளிநொச்சி மாவட்ட பிராந்திய இணைப்பாளர் கிருசாந்தி இரட்ணநாயக்க, அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here