யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் உள்ள வெதுப்பகமொன்று நீதிமன்ற உத்தரவுக்கமைய சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளருக்கு 24000 ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
சுழிபுரம் பகுதியில் உணவு கையாளும் நிலையங்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
அதன்போது வெதுப்பகமொன்று சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டதையடுத்து, உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்றைய தினம் (29.08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வெதுப்பகத்தில் காணப்பட்ட சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் வெதுப்பகத்தை சீல் வைக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளையிட்ட நீதிமன்றம் வெதுப்பக உரிமையாளருக்கு 24000 ரூபாய் தண்டம் விதித்தது.








