- சர்க்கரை மற்றும் தேன்
இளஞ்சிவப்பு நிற உதடு பெற விரும்புவர்கள் சர்க்கரை மற்றும் தேன் கலவையைப் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதன் மூலம் நிறமாற்றத்திற்கு பங்களிக்கும் இறந்த சரும செல்களை அகற்றுகிறது. இதற்கு சர்க்கரை மற்றும் தேன் கலந்து பேஸ்ட்டை உருவாக்குவதன் மூலம் இயற்கையான ஸ்க்ரப்பை உருவாக்கலாம். இந்த கலவையை உதடுகளில் வட்ட இயக்கத்தில் சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு இதை வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை செய்து வருதன் மூலம் உதடுகள் மென்மையாகவும், இளஞ்சிவப்பு நிறத்திலும் தோற்றமளிக்கும்.
- எலுமிச்சைச் சாறு
உதடு நிறமாற்றத்திற்கான மிகவும் பிரபலமான தீர்வுகளில் ஒன்றாக எலுமிச்சைச் சாறு அமைகிறது. எலுமிச்சையானது ஒரு இயற்கையான ப்ளீச்சிங் முகவராக செயல்படுகிறது. இதன் காரணமாக கருமையான உதடுகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றதாகும். இதற்கு படுக்கைக்கு முன்னதாக உதடுகளில் எலுமிச்சைச் சாற்றைத் தடவ வேண்டும். அதன் பிறகு காலையில் கழுவி விடலாம். இவ்வாறு சில வாரங்களுக்கு எலுமிச்சைச் சாற்றைப் பயன்படுத்துவதன் மூலம் உதடு ஈரப்பதமாக இருப்பதுடன், நிறமாற்றத்தை அடையவும் உதவுகிறது.
- கற்றாழை
பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட கற்றாழை சிறந்த இயற்கையான தீர்வாக அமைகிறது. இந்த இனிமையான பண்புகளுக்குப் பெயர் பெற்ற கற்றாழையானது உதடு நிறமியைக் குறைக்க உதவுகிறது. இதற்கு புதிய கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு அதை உதடுகளில் தடவ வேண்டும். இதை 15 நிமிடங்கள் வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வது உதடுகளை ஒளிரச் செய்வதுடன், உதடுகளை நீரேற்றமாக வைக்கவும் உதவுகிறது.
- வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் ஆனது இனிமையான பண்புகளுக்குப் பெயர் பெற்றதாகும். இதன் நீரேற்றமிக்க பண்புகள் உதடுகளின் நிறமாற்றத்திற்கு சிறந்த தேர்வாகும். வெள்ளரிக்காயின் குளிர்ச்சி மற்றும் ஒளிரும் மிக்க பண்புகள் உதடு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே தினமும் ஒரு சில நிமிடங்களுக்கு ஒரு வெள்ளரிக்காய் துண்டை உதடுகளின் மேல் தேய்க்க வேண்டும். இந்த சாறுகள் உதடுகளின் நிறமிகளை ஒளிரச் செய்து உதடுகளுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
- தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் உள்ள பண்புகள் நிறமாற்றம் அடைந்த உதடுகளுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆழமாக நீரேற்றத்தைத் தருவதுடன், உதடுகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இதற்கு படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக, சிறிது தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவி இரவு முழுவதும் விட்டு விட வேண்டும். இவை உதடுகளை ஒளிரச் செய்வதுடன் கருமையை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் காரணிகளிலிருந்து பாதுகாக்கவும், ஈரப்பதமாக வைக்கவும் உதவுகிறது.
இந்த வகை வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் நிறமாற்றம் அடைந்த உதடுகளை இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாற்ற முடியும். மேலும் இவை உதடுகளை நீரேற்றமாக வைக்க உதவுகிறது








