தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 44ஆவது நினைவு தினம் வவுனியாவின் நகர மத்தியில் அமைந்துள்ள அவரது சிலை அருகே இடம்பெற்று இருந்தது.

வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தனிநாயகம் அடிகளாரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், தனிநாயகம் அடிகளார் தொடர்பான சிறப்புரையும் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன், முன்னாள் நகர சபை உறுப்பினர் சேனாதிராசா, தமிழ்மணி அகளங்கன், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தலைவர் ரவீந்திரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here