2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தயாரிப்பாளர் எ.எம். ரத்னம் தயாரித்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். குறிப்பாக, பாடல்கள், சண்டைக் காட்சிகள் மற்றும் மாதவன் – மீரா ஜாஸ்மின் ஜோடியின் நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும், மீரா ஜாஸ்மின் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பலரது பாராட்டையும் பெற்ற இப்படம், 2002-ம் ஆண்டின் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்றாகவும் அமைந்தது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here