தம்புள்ளை நகரத்தில் வெடிபொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (06.09) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 29 மற்றும் 43 வயதுடைய இரண்டு நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து டைனமைட் வெடி மருந்து ஒன்று , 500 கிராம் அமோனியம் மற்றும் 15 டெட்டனேட்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here