நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று (09.09) முதல் அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிப்பை ஏற்படுத்தலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 75  மி.மீ. க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ. என்ற அளவில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here