பங்களாதேஷ் அணியுடனான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் விராட் கோஹ்லி 35 பந்துகளில் 47 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இந்த இன்னிங்ஸில் விராட் கோஹ்லி சர்வதேச கிரிக்கெட்டில் 27 ஆயிரம் ரன்களை கடந்தார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதன் மூலம் அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸில் 27 ஆயிரம் ரன்களை கடந்த நிலையில், விராட் கோஹ்லி 594 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here