கிரகங்களின் இளவரசன் புதன் கன்னி ராசியில் நுழைந்து பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். அதேபோல் அசுரர்களின் குருவான சுக்கிரன் துலாம் ராசியில் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார்.

இப் பெரிய ராஜயோகங்கள் இரண்டும் நவராத்தியிலும் நீடித்திருப்பதால் சில ராசியினருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

  • கன்னி
    தன்னம்பிக்கை அதிகமாகும். முன்னேற்றம் ஏற்படும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். போட்டு வைத்த திட்டங்கள் நிறைவேறும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
  • மகரம்
    அனைத்து துறையிலும் வெற்றி பெறுவார்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேடிய வேலை கிடைக்கும். பணம் சேமிப்பீர்கள். உயர் அதிகாரிகளால் மகிழ்ச்சியடைவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு அதிகம்.
  • கும்பம்
    அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் இந்த ராசியினர் பக்கம் உண்டு. நல்ல ஆதாயம் கிடைக்கும். திருமண வாழ்க்கை செழிப்பாகும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். தம்பதியினருக்கிடையில் மன இணக்கம் அதிகமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here