வடகிழக்கு எகிப்தின் சூயசை பகுதியில் கலாலா பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்ததுடன், 33 பேர் காயமடைந்ததாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி அந்நாட்டுக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு, 28 ஆம்புலன்ஸ்கள் மூலம் சூயஸ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.








