சட்டவிரோதமாக கடல் வளங்களையும் மீண்டும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற இழுவை மடி தொழிலை நிறுத்திவிட்டு வீதியில் இறங்கி போராடுங்கள் இல்லையேல் வடமாகாண மீனவர்களும் பாரிய போராட்டங்களை முன்னெடுப்பர் வடக்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

இந்தியா ராமேஸ்வரத்தில் சட்டவிரோத தொழில்களை செய்து விட்டு ராமேஸ்வரத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களுக்கு வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்ன ராசா இவ்வாறு பதில் வழங்கினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம் காரைநகர் வரை கடல் அட்டை பண்ணைகளுக்கான அனுமதிகளை வழங்கும்போது யாழ்ப்பாணத்தின் சில பிரதேச செயலகங்கள் முறையற்ற முறையில் நடந்து கொண்டுள்ளன இதனை தகவல் அறியும் சட்ட மூலமாக அணுகிய போது ஒவ்வொரு பிரதேச செயலகங்களும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் மீனவர்களுக்கு பதில்களை வழங்கி உள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்று (12.11.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here