வாக்களிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் தேர்தல் செயற்பாடுகள் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

வாக்களிப்பு செயற்பாடுகளில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் தொடர்பில் கடமையாற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரகொட அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற தவறான செய்திகளையும் வதந்திகளையும் பிரசாரம் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். தேர்தல் அமைதியான முறையில் இடம்பெறுவதனூடாக அசௌகரியத்துக்குள்ளாகும் தரப்பினர் முழு நாட்டையும் அசௌரியத்துக்குள்ளாக்கும் வகையில் இதுபோன்ற தவறான தகவல்களை வழங்குவார்கள். அவ்வாறான கருத்துகள் குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here