இத்தாலி ரி20 கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜோ பர்ன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

35 வயதான இவர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 23 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவர் அவுஸ்திரேலிய அணியில் 2014 – 2020ஆம் ஆண்டு கால கட்டங்களில் ஆஸி. அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடியுள்ளார். அதன்பின் அணியில் இடம் கிடைக்காத நிலையில் இத்தாலிக்கு குடி பெயர்ந்து அங்கு விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டு ரி20 உலகக்கிண்ண தொடருக்கு இத்தாலி முன்னேறும் நோக்கில் இவரை புதிய ரி20 தலைவராக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இவர் இதுவரை இத்தாலி அணிக்காக 5 ரி20 போட்டியில் ஆடி ஒரு சதம், ஒரு அரைச்சதம் உள்பட 211 ரன்கள் எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here