இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஜோஸ் ஹசல்வுட் விளையாடுவதில் ஐயம் நிலவுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஹசல்வுட் மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்தத் தொடரில் அவர் பங்கேற்பதில் ஐயம் ஏற்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அணியுடனான இந்தத் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமைத் தெரிவு செய்வதற்காக அவுஸ்திரேலிய கிரக்கெட் அணி தெரிவுக்குழு நாளை ஒன்று கூடவுள்ளது.
இறுதி குழாம் எதிர்வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








