கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று பசறை 10 ம் கட்டைப் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயம் அடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தின் போது, பேருந்தை பேருந்தின் நடத்துனரே செலுத்தியதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நாட்டில் ஆங்காங்கே மோசமான விபத்துக்கள் இடம்பெற்றுவரும் நிலையில், இவ்வாறு பொறுப்பற்று சாரதிகளும் நடத்துனர்களும் நடந்து கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் போது,  6 வயது சிறுவன் உட்பட ஐவர் படுகாயம் அடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படல்கும்பரை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய தாயும் 6 வயதுடைய மகனும் எல்டப் மற்றும் கோணக்கலை பசறை டெமேரியா பகுதியை சேர்ந்த 27, 38, 48 வயதுடையவர்களே இவ்வாறு காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து விபத்து இடம்பெறும் போது பேருந்தில் சுமார் 15 ற்கும் பேர் மேற்பட்டோர் இருந்ததாகவும் ஏனையோருக்கு காய்ங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here