இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த நிலையில் முதல் நாளில் 3 பணயக் கைதிகளை ஹமாஸும், பதிலுக்கு 90 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்துள்ளன.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு எந்தவித தாக்குதல்களும் இடம்பெறவில்லை என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் 630 வாகனங்கள் காசாவுக்குள் நுழைந்துள்ளன.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த போரில் பாலஸ்தீனர்கள் 47,000 பேர் உயிரிழந்தனர்.
இரு தரப்பு இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்த கட்டார், அமெரிக்கா சார்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பணயக் கைதிகளை விடுவித்தால் போரை நிறுத்துவதாக இஸ்ரேல் நிபந்தனை விதித்தது.
இந்நிலையில், பணயக் கைதிகள் பட்டியலை அனுப்ப ஹமாஸ் தாமதப்படுத்தியதால் 3 மணி நேரம் தாமதமாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வருவது தாமதமானதால் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








