கண்டியிலிருந்து எல்ல, பதுளை மற்றும் பண்டாரவளைக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் சிறப்பு ஒடிசி ரயிலில் நடந்த பயணசீட்டு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சுதுஹும்பொல பகுதியில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான தனுர திசாநாயக்க மற்றும் பிரசன்ன குணசேன ஆகியோர் அண்மையில் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இந்த பயணசீட்டு மோசடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்படுவதாக வெளிப்படுத்தியுள்ளனர்.








