ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது இலங்கை விமானப்படையின் விமானங்களை பயன்படுத்தியதாக வெளியான பொய்யான செய்திகளை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
எந்தவொரு விமானமும் பயன்படுத்தப்படவில்லை எனவும், ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் மாத்திரமே பயணித்ததாகவும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.








