இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் முதலீடு செய்வதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் இணக்கம் தெரிவித்துள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் காலித் அல் அமேரி ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது, துறைமுகங்கள் மற்றும் விமானச் சேவைகளில் முதலீடு செய்வதற்கு இணக்கம் தெரிவித்த தூதுவர் விமான முனையத்திற்கும் முதலீடு செய்வதற்கும் இணக்கம் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்த மாத நடுப்பகுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயம் குறித்து அந்த நாட்டின் தூதுவரும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







