கல்கிஸை, படோவிட்ட மாரிபுரம் அருள்மிகு முத்தமாரியம்மன் ஆலயத்தில் அண்மையில் நடைபெற்ற தைப் பொங்கல் விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.
மாரிபுரம் அருள்மிகு முத்தமாரியம்மன் ஆலய நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
இயற்கையை தெய்வமாக வழிபடும் வாழ்வியலை உலக்கு எடுத்தியம்பிய மகத்தான பண்டிகையான தைப்பொங்கல் விழாவில், சகோதர தமிழ் மக்களோடு இணைந்து அதனைக் கொண்டாடக் கிடைத்தமையைப் பெரும் பாக்கியமாக கருதுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்துள்ளார்.








