Sunday, July 26, 2026
No menu items!

சஜித் பிரேமதாச

சிறைச்சாலை கலவரம்;நீதியமைச்சர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கையெழுத்திட்டனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் சிறைச்சாலை அதிகாரிகளும் கைதிகளும் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் உள்ளவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தனது பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் அமைச்சர் நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள்...

நாட்டில் 46000 சிறுவர்கள் துஷ்பிரயோகம்;நடவடிக்கை எடுக்க கோரும் சஜித்!

நாட்டில் 46,000 குழந்தைகள் துஷ்பிரயோகம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கின்றனர் எனவும் அரசு சட்ட நடவடிக்கைகளை தாமதமின்றி விரைவுபடுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். குழந்தை பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார். குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை கையாள்வதில்...

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: சஜித் பிரேமதாச தனது கருத்தை மீளப் பெற வேண்டும் – எம்.பி. சிவஞானம் ஸ்ரீதரன்!

திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ள கருத்தை  அவர் மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், எதிர்கட்சி...

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் – சஜித் பிரேமதாச கோரிக்கை!

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், "இங்கே அறிக்கைகள் வெளியிட வேண்டிய அவசியமில்லை. ஒரு ஊடக நிறுவனம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டால், சட்ட...

திருகோணமலை விவகாரம்-காவல்துறையின் தலையீடு குறித்து சஜித் பிரேமதாச கேள்வி!

திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி பொதிராஜ விஹாரையைச் சுற்றி நேற்று ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக காவல்துறையின் செயல்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இத்தகைய நடவடிக்கைகள் இனவெறி பதற்றங்களை தூண்டும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார். அரசியலமைப்பின் 2ஆம் அதிகாரத்தை மேற்கோள் காட்டிய அவர், புத்தமதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் போதிலும் பிற மதங்களுக்கு...

2026 வரவு செலவுத் திட்டம் மக்களுக்கானதல்ல – சஜித் பிரேமதாச விமர்சனம்..!!

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டதாகவும், அதில் மக்களுக்கு எந்தவிதமான சலுகைகளும் நிவாரணங்களும் இல்லையெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தனது வரவு செலவு திட்ட  உரையை வழங்கியதைத் தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கும்...

எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவுக்கு விஜயம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவுக்குப் புறப்பட்டார். இந்த விஜயத்தின் போது அவர் பல அரசு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மையப்படுத்திய கலந்துரையாடல்கள் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,  சஜித் பிரேமதாச இந்தியாவில் நடைபெறும் பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதுடன், சில...

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானக்கு உயிர் அச்சுறுத்தல்!

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜகத் விதான இவ்வாறு தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு களுத்துறை டிஐஜிக்கு ஐஜிபி அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், "வாகனத்தில்...

எதிர்க்கட்சியின் குரலை அடக்கும் அரசாங்கம்; அரசாங்கத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச !

பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை முன்வைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் குறைக்கப்பட்டு, எதிர்க்கட்சியினர் பேசும் போது ஒலிவாங்கிகள் துண்டிக்கப்படும் நிலைக்கு அரசாங்கம் சென்றுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார். மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதே எதிர்க்கட்சியின் கடமை என்றும், அதைத் தடுக்க முயல்வது கீழ்த்தரமான செயல் என்றும் அவர் விமர்சித்தார். அனுராதபுரம் மாவட்டத்தின் மதவாச்சி மற்றும் கெபித்திகொல்லாவைப் பிரதேசங்களை...

ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய போராட வேண்டும்; ரணில் விக்ரமசிங்க!

தனது கட்சியினரும், சில முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்களும், இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருந்து ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய போராட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சென்றிருந்த மூத்த அரசியல்வாதிகளிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளுக்குள்ளும் ஒற்றுமையை வலியுறுத்திய ரணில் விக்ரமசிங்க,...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img