யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு இன்று மதியம் விஜயம் மேற்கொண்ட பிரதமர் புனரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்துவைத்தார். இதன்பின் அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன் போது வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ஶ்ரீபவானந்தராஜா , றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, ஆசிரியர்க கலாசாலை அதிபர் லலீசன் மற்றும் கல்வி திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகுயோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று பல்வேறு நிகழ்வுகளிலும் பொதுமக்கள் சந்திப்புக்களிலும் பங்கேற்கிறார்.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








