பங்களாதேஷில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக துணிச்சலாக போராடிய மாணவிகளுக்கு அமெரிக்க அரசு இன்று விருது வழங்கி பாராட்டுகின்றது.

கடந்த ஆண்டு பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் மாணவிகள் குழு முக்கிய பங்கு வகித்தது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்த மாணவிகள் குழு தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் துணிச்சல், வலிமை மற்றும் தலைமைத்துவத்திற்காக வழங்கப்படும் விருது வழங்கி பாராட்டுகின்றது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான மார்கோ ரூபியோ மற்றும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் இந்த விழாவினை நடத்துகின்றனர்.

இந்த விழாவில் பங்களாதேஷின் மாணவிகள் போராட்டக்குழு தலைவர்களுக்கு அமெரிக்காவின் முதல் வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றிய மேடலின் ஆல்பிரைட் பெயரில் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here