முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற 2,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதியிலிருந்து நேற்று (02) வரையான காலப்பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 2017 பேரும், கடற்படையில் இருந்து தப்பிச் சென்ற 145 பேரும், விமானப்படையில் இருந்து தப்பிச் சென்ற 163 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற 281 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here