அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் புபுது தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் 1993 முதல் 1994 வரை இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் ஆவார்.

இலங்கைக்காக 11 டெஸ்ட் போட்டிகளிலும் 16 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்தநிலையில் இரண்டாவது முறையாக அவர் அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கு முன்னர் 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை மூன்று வருட காலம் அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டார்.

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் லா, மேற்கிந்திய தீவுகளுடன் இணைந்து நடத்திய ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கிண்ண அணியை வழிநடத்திய பின்னர், கடந்த ஆண்டு இறுதியில் பதவி விலகியதை அடுத்து, புபுது தசநாயக்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here