யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதிமன்றத்துக்கு அருகில் வைத்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மல்லாகம் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கு ஒன்றில் பிரசன்னமாகி, நீதிமன்றிலிருந்து வெளியேறியிருந்த குறித்த பெண் சில தினங்களுக்கு முன்னர் குழுவொன்றினால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

அந்தப் பெண் கடத்தப்படும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று வெளியாகியிருந்த நிலையில், அதனடிப்படையில் தெல்லிப்பளை பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், குறித்த யுவதி தமது சுய விருப்பத்துக்கமையவே தமது பெற்றோருடன் சென்றமை தெரியவந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here