February 7, 2026

2026.01.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

  1. சம்பா மற்றும் கீரிசம்பா நெல் கொள்வனவின் போது குறைந்தபட்ச விலையை அதிகரித்தல்

நெல் சந்தைப்படுத்தல் சபை 2025 ஆம் ஆண்டின் சிறுபோகச் செய்கையின் நாட்டரிசி நெல், சம்பா

நெல் மற்றும் கீரிசம்பா நெல் முறையே ஒருகிலோ 120/- ரூபா, 125/- ரூபா மற்றும் 132/- ரூபாவுக்கு

கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்துவரும் போகங்களில் சம்பா மற்றும் கீரிசம்பா

நெற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் குறித்த நெல் வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக

தற்போது காணப்படுகின்ற குறைந்தபட்ச விலையை அதிகரிப்பது பொருத்தமானதென கமத்தொழில்,

கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட விலைத் தீர்மானக் குழுவால் விதந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்விதந்துரைகளின் அடிப்படையில், உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தரநியமங்களுடன் கூடிய நாட்டரிசி

நெல் கொள்வனவை தொடர்ந்தும் ஒருகிலோவுக்கு 120/- ரூபாவாகப் பேணுவதற்கும், சம்பா நெல் கொள்வனவை ஒருகிலோவுக்கு 125/- ரூபாவிலிருந்து 130/- ரூபாவாகவும், கீரிசம்பா நெல் கொள்வனவை

ஒருகிலோவுக்கு 132/- ரூபாவிலிருந்து 140/- ரூபாவாகவும் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் அமைச்சரவைக்குத் தெளிவுபடுத்தியதடன், அதற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

  1. . வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) கம்பனியின் பெலவத்த சீனித் தொழிற்சாலை அமைந்துள்ள வளாகத்தில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் அரச – தனியார் பங்குடமை முறையின் கீழ் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையிலான இடமாக அபிவிருத்தி செய்தல் வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) கம்பனிக்குச் சொந்தமான பெலவத்த சீனித் தொழிற்சாலை அமைந்துள்ள வளாகத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள இடங்களை சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையிலான இடமாக அபிவிருத்தி செய்யக்கூடிய ஆற்றல்வளம் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, தெரிவு செய்யப்பட்ட இடங்களில் அரச – தனியார் பங்குடமை முறையின் கீழ் அபிவிருத்தி செய்வதற்குப் பொருத்தமான முதலீட்டாளர்களை அடையாளங் காண்பதற்கு சரியான பெறுகை வழிகாட்டியைக் கடைப்பிடித்து கருத்திட்ட விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கும், அதற்குத் தகைமை பெறுகின்ற முதலீட்டாளர்களுக்கு கருத்திட்ட முன்மொழிவுகளை கோருவதற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  1. மீன்பிடி மற்றும் நீரியல் உயிரின வளர்ப்புக் கொள்கையை அமுல்படுத்தல்

மீன்பிடித் துறையில் நியாயமான பங்கீடு மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் உயிரின வளர்ப்புக்களை பேண்தகு வகையில் முகாமைத்துவம் செய்யும் நோக்கில் மீன்பிடி மற்றும் நீரியல் உயிரின வளர்ப்புக் கொள்கை வரைவாக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் அவ்வப்போது காலத்தோடு தழுவியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும், அதற்காக அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சமகால அரசின் ‘வளமான நாடு – அழகான வாழ்வு’ கொள்கைப் பிரகடனத்திற்கமைய அரசின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நோக்கங்களுடன் இணங்கும் வகையில் மீன்பிடி மற்றும் நீரியல் உயிரின வளர்ப்பு தேசிய கொள்கையை இற்றைப்படுத்தி, மீண்டும் வரைவாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன்,

அதற்கு தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் விதப்புரையும் கிடைத்துள்ளது. அதற்கிணங்க, மீன்பிடிமற்றும் நீரியல் உயிரின வளர்ப்புக் கொள்கையை ஏனைய கொள்கைகளுடன் ஒருங்கிணைத்து அமுல்படுத்துவதற்காக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. குறைப்பயன்பாட்டுக் காணிகள் சொத்துக்களை உயரிய வகையிலான பயன்பாட்டுக்காக முதலீட்டாளர்களுக்கு வழங்குதல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழுள்ள இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி போன்ற நிறுவனங்களின் கீழுள்ள குறைப்பயன்பாட்டுக் காணிகள்,சொத்துக்களில் முதலாம் கட்டமாக அடையாளங் காணப்பட்டுள்ள குறைப்பயன்பாட்டுக் காணிகள்,சொத்துக்களை, 2025.06.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரம், பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு ஒப்படைப்பதற்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் காணிகள் சொத்துக்களை முதலாம் அந்தந்த கட்டத்தில் நிறுவனங்களின் உள்வாங்கப்படாத கீழ் தொடர்ந்தும் குறைப்பயன்பாட்டுக் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கீழ்வரும் குறைப்பயன்பாட்டுக் காணிகள்,சொத்துக்களுக்குப் பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு சரியான பெறுகை முறையைக் கடைப்பிடித்து குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • இரண்டாம் கட்டத்தின் கீழ் அடையாளங் காணப்பட்டுள்ள இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான குறைப்பயன்பாட்டுக் காணிகள்,சொத்துக்கள்.
  • தேயிலைச் சக்தி நிதியத்திக்குச் சொந்தமான மாத்தறை மாவட்டத்திலுள்ள 40.48 ஹெக்ரெயார் மாவரல தோட்டக் காணி மற்றும் தேயிலைத் தொழிற்சாலை.
  • இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் பயன்படுத்தி வருகின்ற கொண்டச்சி தோட்டத்தின் 1,541 ஹெக்ரெயார் குறைப்பயன்பாட்டுக் காணி.
    1. முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் ஐந்துமாடி மருத்துவ விடுதித் தொகுதியை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல் .
        • கருமபீட இலக்கம் 04 – 972.77 மில்லியன் ரூபாய்கள் மற்றும் ஏற்புடைய வரிகளுடனான தொகைக்கு ஊழஅஅநசஉயைட Commercial Bank of Ceylon PLCஇற்கு
        • கருமபீட இலக்கம் 05 – 877.14 மில்லியன் ரூபாய்கள் மற்றும் ஏற்புடைய வரிகளுடனானபாடசாலை எழுதுபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு பிள்ளைகளுக்கான கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்தை 2026 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்தல்பாடசாலை எழுதுபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு பிள்ளைகளுக்கான கொடுப்பனவுமுல்லைத்தீவு மாவட்டத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை சுகாதார சிகிச்சைகளை வழங்கி வருகின்றது.குறித்த மருத்துவமனையில் சிகிச்சைகளை வழங்கும் 08 விசேட நிபுணத்துவ அலகுகள் காணப்படுவதுடன், மொத்தமாக 195 நோயாளர்களுக்கான கட்டில் வசதிகளுடன் கூடியதாக உள்ளது.

          நோயாளர்களுக்கான குறைந்த செலவுடன் உயரிய தரப்பண்பான சுகாதார சிகிச்சைகளைத் தொடர்ந்தும் வழங்குவதற்காக மூன்றாம் நிலை சிகிச்சை நிறுவனமாக இயங்குகின்ற பிரதான மருத்துவமனையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள படிமுறைகளின் கீழ், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் ஐந்துமாடி மருத்துவ விடுதித் தொகுதியை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

          அதற்கு 600 மில்லியன் இலங்கை ரூபாய்களை நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

          குறித்த நிதியுதவியைப் பயன்படுத்தி இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும்,

          அதற்காக இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

          1. ஆரம்ப சிகிச்சை சேவைகளில் முறைசார்ந்த வகையில் உயர் குருதியழுத்தம் மற்றும் நீரிழிவு

          Resolve to Save Lives முகாமைத்துவ கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் நிறுவனத்தால் முன்னர் சுகாதார அமைச்சுக்கு வழங்கிய 304,795 அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பயன்படுத்தி ‘இலங்கையில் ஆரம்ப சுகாதார சிகிச்சைகளை வழங்குவதற்கான ஒருங்கிணைந்த பொறிமுறையில் உயர் குருதியழுத்தத்தைத் தடுத்தல் மற்றும்  முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான பல்துறை இடையீடுகள்’ எனும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2021.01.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

          அதற்கமைய, 2021 தொடக்கம் 2024 வரையான காலப்பகுதியில் குறித்த கருத்திட்டச் செயற்பாடுகள்

          களுத்துறை, கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

          இக்கருத்திட்டத்தின் நேர்மயமான பெறுபேறுகளைக் கருத்தில் கொண்டு, மேலும் இக்கருத்திட்டத்தை

          காலி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

          அதற்காக கருத்திட்டத்தின் ஆரம்பத்தில் எஞ்சியிருக்கின்ற நிதி மற்றும் மேலதிகமாக நிதியுதவியுடன்

          Resolve to Save Lives நிறுவனத்தால் வழங்கப்படுகின்ற 242,125 அமெரிக்க டொலர் மொத்த நிதியுதவியின் கீழ் ‘ஆரம்ப சிகிச்சை சேவைகளில் முறைசார்ந்த வகையில் உயர் குருதியழுத்தம் மற்றும் நீரிழிவு முகாமைத்துவம் செய்தல்’ எனும் கருத்திட்டமாகப் பெயரிட்டு காலி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்கான நிதியொதுக்கீடு செய்வதற்கும்

          Resolve to Save Lives நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

          1. இலங்கை மின்சக்தி தொழிற்றுறையின் ஆரம்ப கையுதிர்ப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

          சட்டத்தின் மின்சக்தி துறை மறுசீரமைப்பு செயலகத்தால் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சக்தி திருத்த ஏற்பாடுகளுக்கமைய மின்சக்தி விடயதான அமைச்சரின் கொள்ளை ஏற்பாடுகளுக்கமைய, ஆரம்ப கையுதிர்ப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

          மின்னுற்பத்தி, மின்மாற்றம், மின் விநியோகம் மற்றும் பங்கீடு போன்றவற்றை மீள்கட்டமைத்தல் பணிகளை ஒப்படைப்பதற்கான அனைத்து தகவல்கள் மற்றும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக துணைக் கம்பனிகளுக்குத் தேவையான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை ஒப்படைப்பதற்கான நிதித்திட்டம் குறித்த ஆரம்ப கையுதிர்ப்புத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

          அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள ஆரம்ப கையுதிர்ப்புத் திட்டத்திற்காகவும், ஆரம்ப கையுதிர்ப்புத் திட்டத்திற்கமைய இலங்கை மின்சார சபையின் சொத்துக்கள், பொறுப்புக்கள், பணிகள், பணிப்பொறுப்புக்கள் மற்றும் நடவடிக்கைகளுக்காக இலங்கை மின்சார சபை துணைக்கம்பனிகளுக்கு ஒப்படைப்பதற்காக வலுச்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

          1. அரச நிறுவனங்களில் கட்டிடங்கள் சார்ந்த பொறியியல் மதிப்பீடுகளைத் தயாரித்தல்

          அரச நிறுவனங்களில் கட்டிடங்கள் சார்ந்த பொறியியல் மதிப்பீட்டைத் தயாரிக்கும் போது பொதுவான கட்டிடங்கள் கட்டண அட்டவணையை அடிப்படையாகக் கொள்வதன் மூலம் மொத்தச் செலவு மதிப்பீட்டின் ஒத்திசைவான தன்மையைப் பேணுவதற்கு இயலுமை கடைக்குமென அவதானிக்கப்பட்டுள்ளதுடன்,

          2024.07.23 அன்று இடம்பெற்ற அரச கணக்குகள் பாராளுமன்ற செயற்குழுக் கூட்டத்தில், கட்டிடங்கள் திணைக்களத்தின் ‘கட்டிடங்கள் கட்டண அட்டவணையை’

          அடிப்படை ஆவணமாகப் பயன்படுத்துவதற்கான சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்குதல்.

          பொருத்தமானதென விதப்புரை செய்யப்பட்டுள்ளது.

          அதற்கமைய, கட்டிடங்கள் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டுள்ள ‘கட்டிடங்கள் கட்டண அட்டவணையை’ மத்திய அரசுக்குக் கீழ் இங்குகின்ற அனைத்து நிறுவனங்களும் கட்டிடங்கள் சார்ந்த மதிப்பீடுகளைத் தயாரிக்கும் போது அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவதற்குத் தேவையான சுற்றறிக்கை ஆலோசனையை வழங்குவதற்காக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

          1. சர்வதேச நீர் சங்கத்தின் 2026 நீர்ப் பாதுகாப்பு மாநாடு மற்றும் கண்காட்சிக்கான

          உபசரிப்புக்களைப் பொறுப்பேற்றல் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ‘’நீர் மற்றும் பேண்தகு அபிவிருத்தி’ எனும் தொனிப்பொருளிலான வருடாந்த மாநாட்டுக்கு இணையாக சர்வதேச நீர் சங்கத்தின் ‘நீர்ப் பாதுகாப்பு மாநாடு மற்றும் கண்காட்சி – 2026’ மாநாட்டை எமது நாட்டில் நடாத்துவதற்கு தேசிய நீர் வழங்கல்.

          மற்றும் வடிகாலமைப்புச் சபை உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த மாநாட்டில் நீர் தொடர்பான துறைசார் கல்வியல், தொழிற்றுறை, அரச ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் உலகளாவிய ரீதியாக முன்னணி வகிக்கின்ற நிபுணர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

          அதன்மூலம் பாதுகாப்பானதும் பேண்தகு வகையில் குடிநீர் விநியோகம் செய்கின்ற அர்ப்பணிப்புள்ள பங்காளர்களிடையே உரையாடுவதற்கும் பங்களிப்புக்களை விருத்தி செய்து கொள்வதற்குமான வாய்ப்புக்கள் கிடைப்பதுடன், அதன்மூலம் அர்த்தமுள்ள சர்வதேச பங்காண்மை விருத்தி பெறும்.

          அதற்கமைய, உலக நீர் தினத்திற்கு இணையாக 2026 பங்குனி மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரைக்கும் இரத்மலானையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நீர் மற்றும் சுகாதாரநலம் தொடர்பான சிறப்பு நிலையத்தில் உலக நீர் சங்கத்தின் ‘நீர்ப் பாதுகாப்பு மாநாடு மற்றும் கண்காட்சி – 2026’ மாநாட்டை நடாத்துவதற்காக, இலங்கை உபசரிப்புக்களைப் பொறுப்பு வகிப்பதற்கு வீடமைப்பு, கட்டுமானங்கள் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

          1. பாடசாலை எழுதுபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு பிள்ளைகளுக்கான கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்தை 2026 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்தல்

          அஸ்வெசும உரித்துள்ள குடும்பங்களிலுள்ள பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு எழுது பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக ஒரு பாடசாலைப் பிள்ளைக்கு 6,000/– ரூபா கொடுப்பனவை நலன்புரிகள் நன்மைகள் சபை மூலமாக வழங்குவதற்கும், அஸ்வெசும வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்படாததும், ஆனாலும் கொடுப்பனவு கிடைக்க வேண்டியவர்கள், நாடளாவிய ரீதியில் 300 பிள்ளைகளுக்கும் குறைவாகவுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள், பிரிவெனாக்கள் மற்றும் துறவுப் பெண்கள் ஆச்சிரமங்களில் கல்வி பயில்கின்ற மாணவர்கள் மற்றும் துறவு மாணவர்கள், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலுள்ள பாடசாலை செல்லும் மாணவர்களுக்காக ஒருவருக்கு 6,000/- கொடுப்பனவை கல்வி. உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஊடாக செலுத்துவதற்கும், 2025 ஆம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

          குறித்த வேலைத்திட்டத்தை 2026 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி.

          உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

          1. தித்வா’ புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிவில், புகையிரத மற்றும் சேவை உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் புனரமைப்பதற்கான ஆலோசனை சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான தகைமையுடைய நிறுவனங்களைத் தெரிவு செய்தல் .

          போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை புகையிரத சேவைகளுடன் ‘தித்வா’ புயல் அனர்த்தத்தால் சேதமடைந்துள்ள வீதிகள் மற்றும் புகையிரத வீதிகளின் உட்கட்டமைப்பு வசதிகள், நடுத்தரக்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் புனரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான திட்டத்தையும் மதிப்பீட்டையும் தயாரித்தல், நிர்மாண கண்காணிப்புக்கள் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு தற்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை புகையிர திணைக்களத்தில் பணிபுரிகின்ற தொழில்வாண்மை ரீதியான ஊழியர்கள் பற்றாக்குறையால் ஏற்புடைய புனரமைப்புப் பணிகளில் தாமதம் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்குத் தீர்வாக தகுந்த பெறுகை முறையைக் கடைப்பிடித்து தகைமையுடைய ஆலோசனைச் சேவை நிறுவனங்களை 02 ஆண்டுகளுக்குப் பதிவு செய்வதற்கும், அவ்வாறு பதிவு செய்யப்படுகின்ற ஆலோசனை சேவை நிறுவனங்களிடம் போட்டித்தன்மையான விலைமனுக் கோரல்களைப் பெற்று சேவைத் தேவைகளுக்கமைய ஒவ்வொரு பணிக்கும் சேவைகளை வழங்குவதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

          1. இலங்கை புகையிரத திணைக்களத்திடமுள்ள பழைய இரும்புகளை அகற்றல் இலங்கை புகையிரத திணைக்களத்திடமுள்ள பழைய இரும்புகளை அகற்றுவதற்காக தேசிய போட்டி விலைமனுக் கோரல் முறையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

          அதற்காக 11 விலைமனுதாரர்கள் விலைமனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

          உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரையின் அடிப்படையில் ஒருசில வகுதிக்கான பழைய இரும்புகளை அகற்றுவதற்காக 2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

          மேலும், 04 வகுதியைச் சேர்ந்த பழைய இரும்புகளுக்கு கணிசமான அளவில் பதிலளித்துள்ள உயர்ந்தபட்ச விலைமனுவைச் சமர்ப்பித்துள்ள M/s S.R Steel (Pvt) Ltd கம்பனியுடன் உடன்பாட்டுக் கலந்துரையாடலை மேற்கொண்ட பின்னர், உடன்பாடு தெரிவித்துள்ள விலையின் அடிப்படையில் உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் வழங்கப்பட்டுள்ள விதப்புரைகளைக் கருத்தில் கொண்டு, குறித்த பழைய இரும்பு வகுதிகளை 114.51 மில்லியன் ரூபாய்களுக்கு M/s S.R Steel (Pvt) Ltd இற்கு வழங்குவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

          1. கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகைதரு முனையத்தில் நாணயமாற்று கருமபீடத்தை இயக்குதல் .

          எமது நாட்டுக்கு வருகை தருகின்ற விமானப் பயணிகளுக்கு நாணயமாற்றுத் தேவைகளுக்கான வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்படடுள்ள பிரதேசத்தில் நாணயமாற்றுக் கருமபீடம் இயங்கி வருகின்றது.

          விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக வருகைதரு முனையத்தை மீண்டும் தயாரிக்கும் போது அங்கு இயங்கிய நாணயமாற்று கருமபீடம் வேறு இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

          புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் நாணயமாற்றுக் கருமபீடத்தை இயக்கும் போது மாதாந்த வாடகை பற்றிய உடன்பாட்டுக்கு எட்டுவதற்கு சிரமமாக இருப்பதால், அப்போதிருந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதற்கு வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீலங்கா) (தனியார்) கம்பனி நடவடிக்கை எடுத்துள்ளது.

          பின்னர், வருகைதரு முனையத்தில் புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் 03 ஆண்டுகள் ஒப்பந்த காலத்திற்கு வெளிநாட்டு நாணயமாற்று கருமபீடத்தை நிறுவுவதற்கு இலங்கை மத்திய வங்கியால் அனுமதி,அங்கீகாரம்  வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களிடமிருந்து மட்டுப்படுத்தப்பட்ட போட்டி விலைமுறி முறைமையின் கீழ் விலைமனுக்களைக் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

          அதற்கமைய, கிடைக்கப் பெற்றுள்ள 05 விலைமனுக்கள் தொடர்பாக உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் வழங்கப்பட்டுள்ள விதப்புரையின் பிரகாரம், கீழ்க்காணும் வகையில் 03 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு நாணயமாற்று கருமபீடத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில்

          விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது தொகைக்கு F Bank of Ceylonஇற்கு

        • கருமபீட இலக்கம் 06 – 720.79 மில்லியன் ரூபாய்கள் மற்றும் ஏற்புடைய வரிகளுடனான தொகைக்கு Thomas Cook Lanka pvt) Ltdஇற்கு
        • கருமபீட இலக்கம் 07 – 646.64 மில்லியன் ரூபாய்கள் மற்றும் ஏற்புடைய வரிகளுடனான தொகைக்கு Sampath Bank PLC இற்கு
        • கருமபீட இலக்கம் 08 – 631.61 மில்லியன் ரூபாய்கள் மற்றும் ஏற்புடைய வரிகளுடனான தொகைக்கு People’s Bankஇற்கு
          1. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ வழங்கல்களுக்குரிய 2008 – 2023 வரையான காலப்பகுதியில் தீர்க்கப்படாத கொடுப்பனவுகளைச் செலுத்தல்.

          மருத்துவ வழங்கல் பிரிவினால் நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்குத் தேவையான ஒளடதங்கள் மற்றும் ஏனைய மருத்துவ வழங்கல்கள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், அரச மருந்துகள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது.

          குறித்த கொள்வனவுகளுக்கான சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு வருடாந்த மருந்துகளுக்காக திறைசேரியால் வழங்கப்படும் நிதியொதுக்கீட்டின் மூலம் 2023.12.31 ஆம் திகதி வரை கொடுப்பனவு செய்யப்பட்டுள்ள போதிலும், 2008 தொடக்கம் 2023 வரையான காலப்பகுதிக்குரிய அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு மேலும் செலுத்த வேண்டிய 32.92 பில்லியன் ரூபாய் தொகை இருப்பதாக, அக்கூட்டுத்தாபனத்தால் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்குப் பல தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட மதிப்பீடு தொடர்பாக கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விடயம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்காக வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கமைய அரச தொழில்முயற்சி திணைக்களத்தின் தலைமையில் செலுத்த வேண்டியுள்ள கொடுப்பனவு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன.

          அதற்கமைய, 2018.01.01 ஆம் திகதி தொடக்கம் 2023.12.31 வரை 23.87 பில்லியன் ரூபாய்கள் செலுத்தப்பட வேண்டுமென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

          அத்துடன், 2008.01.01 ஆம் திகதி தொடக்கம் 2017.12.31 வரை செலுத்தப்பட வேண்டிய தொகை தொடர்ந்தும் கணக்கிடப்படுகின்றது.

          அதற்கமைய, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, 2018.01.01 ஆம் திகதி தொடக்கம் 2023.12.31 வரையான காலப்பகுதியில் செலுத்த வேண்டிய 23.87 பில்லியன் ரூபாய் தொகையை இவ்வாண்டில் கட்டம் கட்டமாகச் செலுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

          1. அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நடைமுறைப்படுத்தல் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை

          அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங் கண்டு, அதுதொடர்பாக கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய அளவை அடையாளங் கண்டு அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.12.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

          குறித்த குழுவுக்கு அந்தந்த அமைச்சுக்களால், அவற்றின் கீழ் காணப்படுகின்ற திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில்

          6 ,7 காணப்படுகின்ற வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களைக் கருத்தில் கொண்டு, குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் ஆட்சேர்ப்புக்களை

          மேற்கொள்வதற்காக அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

          தொடர் இல அமைச்சுக்கள்,மாகாணசபை,ஆணைக்குழு ஆட்சேர்ப்பு செய்வதற்காக குழுவால் விதந்துரைக்கப்பட்டுள்ள பதவி

          வெற்றிடங்களின் எண்ணிக்கை

          1. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 442
          2. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு 452
          3. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு 705
          4. கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும்

          நீர்ப்பாசன அமைச்சு  10

          1. பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

          அமைச்சு 37

          1. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி

          அமைச்சு  76

          1. பாதுகாப்பு அமைச்சு 102
          2. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற

          விவகாரங்கள் அமைச்சு 19

          1. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு

          மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு  10

          1. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு

          அபிவிருத்தி அமைச்சு  01

          1. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், மற்றும் நகர

          அபிவிருத்தி அமைச்சு 166

          1. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக

          வலுவூட்டல் அமைச்சு  167

          1. வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு 33
            1. விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சு 23
            2. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
              1. கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள்அமைச்சு 50அமைச்சு
            1. மத்திய மாகாண சபை 248 ,203
            2. வடமத்திய மாகாண சபை 06
            3. தேசிய பொலிஸ் ஆணைக்குழு 01
            4. இலங்கை ஆசிரியர் சேவைக்கான ஆசிரியர்கள் 23,344

            மொத்தம் 26,095

            1. அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை அதிகரித்தல்

            அரச ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணம் தொடர்பான தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய,

            ஊழியர் ஒருவருக்கு தைப்பொங்கல், ரமழான், சிங்கள தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும்

            நத்தார் போன்ற பண்டிகைகளுக்கும் யாத்திரிகப் பயணங்களுக்கும் (சிவனொளிபாத மலை தரிசனம்

            மற்றும் ஹஜ் கடமை போன்ற) முற்பணமாக 10,000/- ரூபாவைப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை

            உண்டு. குறித்த முற்பணம்  வட்டியின்றி 08 மாதத் தவணைகளாக அல்லது அதற்கு முன்னரோ

            அறவிடுவதற்கான ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அப்பண்டிகை முற்பணத்தை 15,000/- ரூபாவாக

            அதிகரித்து வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 2026 ஆம் அதற்கமைய, ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம்

            அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை

            முற்கொடுபணத்தை 15,000/- ரூபாவாக அதிகரிப்பதற்கு இயலுமாகும் வகையில் தாபன விதிக்கோவையின் உரிய ஏற்பாட்டை திருத்தம் செய்வதற்கும், அதுதொடர்பாக சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளிவிடுவதற்கும் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

            1. அரச நிறுவனங்களுக்குரிய வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கு டிஜிட்டல் அட்டை முறையை அறிமுகப்படுத்தல்

            அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு டிஜிட்டல் அட்டை முறையைப் பயன்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

            அதன்மூலம், எரிபொருள் தேவைக்கேற்ப இணையவழி வங்கி முறைமை மூலம் அதற்குரிய பணத்தை ஈடு செய்வதற்கும், தனிநபர் தலையீடுகளைக் குறைப்பதன் மூலம் உயர்ந்த வெளிப்படைத்தன்மையுடனும் வினைத்திறனாகவும் எரிபொருள் விநியோகம் செய்வதற்கும் வாய்ப்புக் கிடைக்கும். தற்போது இலங்கை வங்கியும் பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இணைந்து வாகனங்களுக்கான டிஜிட்டல் அட்டை மூலம் எரிபொருள் விநியோகம் செய்கின்ற முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

            அதற்கமைய, முதலாவதாக, முன்னோடி வேலைத்திட்டமாக ஜனாதிபதி செயலகத் தொகுதியிலுள்ள வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்காக இப்பொறிமுறையை அமுல்படுத்தவும், இதன் வெற்றித்தன்மையை அடிப்படையாகக் கொண்டு ஏனைய அரச நிறுவனங்களுக்கும் குறித்த பொறிமுறையை அமுல்படுத்துவதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

            18. நிதிக் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கைப்படுத்தல் (திருத்தச்) சட்டமூலம், பணத் தூய்தாக்கல்
            தடுப்பு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தடுப்பு சமவாய
            (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
            2006 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நிதிக் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கைப்படுத்தல் சட்டம்,
            2006 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க பணத் தூய்தாக்கல் தடுப்புச் சட்டம் மற்றும் 2025 ஆம் ஆண்டின்
            25 ஆம் இலக்க பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தடுப்பு சமவாயச் சட்டம் போன்றவற்றைத் திருத்தம்
            செய்வதற்காக
            2025.05.26
            அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம்
            வழங்கப்பட்டுள்ளது. சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின்
            ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும்,
            பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார
            அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை
            அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *