Thursday, July 9, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

நாடளாவிய ரீதியில்  விசேட சுற்றிவளைப்பில் 588 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (திங்கட்கிழமை, 24) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 28,382 பேர் பரிசோதிக்கப்பட்டு, சந்தேகத்தின் பேரில் 588 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், குற்றங்களில் நேரடியாக தொடர்புடைய 23 பேர் அடையாளம் காணப்பட்டனர், பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 254 பேர் மற்றும் திறந்த பிடியாணைகளுக்கமைய 162 பேர்...

தனியார் நிறுவனத்திடம் ரூ.36 மில்லியனுக்கும் மேற்பட்ட மோசடி ; இருவர் கைது!

தனியார் நிறுவனமொன்றுக்கு வைஃபை ஆண்டெனாக்கள் வழங்குவதாக கூறி ரூ.36,989,684 மதிப்புள்ள மோசடி நடத்திய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்தேகநபர்கள் வாக்குறுதியளித்தபோதும் பொருட்களை வழங்காததாகவும், மோசடி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் கடந்த நாள் பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அழைக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 34...

வவுனியாவில் வர்த்தக நிலையமொன்றில்  தீ விபத்து

வவுனியா நகர பகுதியில் உள்ள  வர்த்தக நிலையமொன்றில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க  தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுள்ளது.

மட்டக்களப்பில் தொல்லியல் அறிவிப்புப் பலகைகள் அகற்றம் — விசாரணைகள் தீவிரம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுவப்பட்டிருந்த தொல்லியல் அறிவிப்புப் பலகைகள் அகற்றப்பட்ட சம்பவத்திற்காக, வாழைச்சேனை பிரதேச சபை தலைவர் உட்பட ஆறு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளன. பொலிஸார் தெரிவித்ததின்படி, சம்பவத்துக்கு தொடர்புடைய சந்தேகநபர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதற்கிடையில், நேற்று (நவம்பர் 24) வாழைச்சேனை, கிரான் பகுதியில் 53 வயதுடைய ஒருவர்...

கைது செய்யப்பட்ட நபர்களைக் கண்காணிக்க புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்திய இலங்கை காவல்துறை!

குற்றவியல் அல்லது போக்குவரத்து தொடர்பான குற்றங்களுக்காக புகார் அளிக்கப்பட்ட நபர்களைக் கண்காணிக்கும் செயல்முறையை எளிமைப்படுத்தும் வகையில், கைது செய்யப்பட்ட கண்காணிப்பு தகவல் அமைப்பு (AMIS) எனும் புதிய டிஜிட்டல் தளத்தை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. காவல்துறையின் தகவலின்படி, இந்த அமைப்பு மூலம் ஒரு நபர் ஏற்கனவே எந்தவொரு குற்றத்திற்காக புகார் அளிக்கப்பட்டுள்ளாரா என்பதை அதிகாரிகள் உடனடியாக சரிபார்க்க...

கனடாவில் LTTE சின்னங்களை பொதுவில் பயன்படுத்துவதைத் தடைசெய்யுமாறு இலங்கை கோரிக்கை!

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனடாவில் பிரிவினைவாதக் கொள்கைகளை ஊக்குவிக்கும் செயல்பாடுகள் குறித்து கவலைத் தெரிவித்ததுடன், குறிப்பாக விடுதலைப் புலிகள் (LTTE) சின்னங்களை பொதுவில் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கனடா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கனடாவின் இலங்கை உயர்ஸ்தானிகர் இசபெல் கெத்தரின் மார்ட்டினுடன் நேற்று (24 நவம்பர் 2025) நடைபெற்ற சந்திப்பின்போது அவர்...

சாவகச்சேரியில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை!

சாவகச்சேரி நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி மன்றத்தின் 6ஆம் மாதாந்திர சபை அமர்வில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பட்டாசு வெடிப்பது காரணமாக பொதுப் போக்குவரத்து பாதிப்பு, வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் அபாயம் மற்றும் சுற்றுப்பிரதேசங்கள் அசுத்தமடைவது குறித்து உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். தவிசாளர் தெரிவித்ததாவது: மயான அனுமதி வழங்கும் போது,...

இன்றைய நாளுக்கான வானிலை !

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் சில தினங்களுக்கு  நிலவுகின்ற மழையுடனான வானிலை  தொடரக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா...

தமிழ் கட்சிகளிடையே குழப்பம் – மாவீரர் துயிலும் இல்லத்தில் சிக்கல்..!!

தமிழ் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையின்மையால் மாவீரர் துயிலும் இல்லத்தில் பல்வேறு பிரச்சினகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்திலயே இவ்வாறு சிக்கல்நிலை ஏற்பாட்டு குழு உறுப்பினர்களில் ஒருவரான இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உடுத்துறை மாவீரர் துயிலுமுல்லத்தின் ஏற்பாட்டுக்குழு இம்முறை மாவீரர் பெற்றோர்களை...

பாடசாலை வேன்களுக்கு CCTV கட்டாயம்!

பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல்ரத்னாயக்க கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்இதனைக் குறிப்பிட்டார். போக்குவரத்தின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அதனை குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் தமது அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும்...
- Advertisement -

Latest News

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த...