Thursday, July 9, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

பாடசாலை வேன்களுக்கு CCTV கட்டாயம்!

பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல்ரத்னாயக்க கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்இதனைக் குறிப்பிட்டார். போக்குவரத்தின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அதனை குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் தமது அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும்...

மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து!

பாணந்துறை ஹிரண பகுதியில் உள்ள மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மொரட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.  

Amazon உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா!

சுமார் 17 வருடங்களாக கொழும்பு தலைநகரில் இயங்கி வரும் Amazon College & Campus கல்வி நிறுவனமானது, நேற்றைய தினம் 23 நவம்பர் 2025 , பிரம்மாண்டமான முறையில் தனது பட்டமளிப்பு விழாவை நடாத்தியது. இந் நிகழ்வு நேற்று மாலை 2 மணி முதல் BMICH – Lotus மண்டபத்தில் நடைபெற்றது. Diploma, HND, Degree, Masters...

அஞ்சல் திணைக்களத்தின் பெயரில் சர்வதேச ஆன்லைன் மோசடி – முன்னாள் நீதிபதி உட்பட பலர் பாதிப்பு!

இலங்கையின் அஞ்சல் திணைக்களத்தின் பெயரில் செயல்பட்டு வரும் சர்வதேச ஆன்லைன் மோசடி கும்பலால், முன்னாள் இலங்கை நீதிபதி ஒருவர் உட்பட பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்னாள் நீதிபதியின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ரூ. 400,000 மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டின்படி, மோசடி செய்பவர்கள் தங்களை அஞ்சல் திணைக்கள அதிகாரிகள் என...

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஒரே நாளில் 1,038 பேர் கைது!

யாழ்ப்பாணம் – ஜனாதிபதி பணிப்புரைக்கமைய, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை பொலிஸாரின் தொடர்ந்து நடைபெற்று வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் நேற்று (23) பலர் கைது செய்யப்பட்டனர். பொலிஸார் வெளியிட்ட அறிக்கையின் படி, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஹெரோயின்: 517 கிராம், ஐஸ்: 798 கிராம், கொக்கெய்ன்: 4.87 கிராம், கஞ்சா: 1.877...

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்!

யாழ்ப்பாணம் – பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாட்கள் செயல்முனைவு வேலைத்திட்டத்தின் தொடக்கத்தையொட்டி, பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் இன்று (24) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ சின்னங்கள் அணிவிக்கப்பட்டன. இதனைச் சம்பந்தமாக கருத்து தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், வன்முறையற்ற வகையில் கௌரவமாக வாழ்வது உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட...

யாழில் போதை மாத்திரைகளுடன் மாணவர்கள் கைது!

யாழ்ப்பாண மாவட்ட போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் மற்றும் யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர், போதை மாத்திரைகள் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிமாவட்ட பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவரையும் பொலிஸார் தடுத்து விசாரணை நடத்தினர். சோதனை மேற்கொள்ளும்...

லொறியுடன் நால்வரை கடத்திய தம்பதியினர் கைது!

களுத்துறை – இங்கிரிய பகுதியில் லொறி ஒன்றையும் அதில் பயணித்த நால்வரையும் வலுக்கட்டாயமாக கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியினர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இங்கிரிய மேல் பிரிவைச் சேர்ந்த நபரின் வாகனமே இவ்வாறு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில்  தெரியவருகையில், முறைப்பாட்டாளர் கடந்த ஆறு ஆண்டுகளாக அட்டைப் பெட்டி வர்த்தகத்தில் ஈடுபட்டு...

அமெரிக்க தூதுவருடன் பிரதமர் சந்திப்பு : கல்வி மற்றும் கலாசார ஒத்துழைப்புகள் குறித்து ஆலோசனை!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (24) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் படையணி (Peace Corps) கல்வி மற்றும் கலாசார பரிமாற்றத் திட்டம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தூதுவர் விளக்கமளித்தார். மேலும்,...

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு விசேட போக்குவரத்து திட்டம்!

கண்டி, கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு செல்வதில் சிரமத்தை எதிர்நோக்கும் உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் இலங்கை போக்குவரத்து சபையும் அறிவித்துள்ளன. திடீர் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்த சூழ்நிலைகளில், பரீட்சார்த்திகள் தங்களின் பரீட்சை நிலையங்களுக்கு இடையூறு இல்லாமல் செல்லுவதற்கு தேவையான...
- Advertisement -

Latest News

பேருந்து சாரதிகள், நடத்துனர் மீது போதைபொருள் பரிசோதனை

நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான நடமாடும் போதைப்பொருள் பரிசோதனை வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்...