இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனடாவில் பிரிவினைவாதக் கொள்கைகளை ஊக்குவிக்கும் செயல்பாடுகள் குறித்து கவலைத் தெரிவித்ததுடன், குறிப்பாக விடுதலைப் புலிகள் (LTTE) சின்னங்களை பொதுவில் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கனடா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவின் இலங்கை உயர்ஸ்தானிகர் இசபெல் கெத்தரின் மார்ட்டினுடன் நேற்று (24 நவம்பர் 2025) நடைபெற்ற சந்திப்பின்போது அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

அமைச்சர் ஹேரத் மேலும் குறிப்பிட்டதாவது,

கனடாவில் செயல்படும் சில குழுக்கள் மேற்கொள்ளும் இத்தகைய செயற்பாடுகள், இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முரணானவை. எனவே, இலங்கையின் இனக்குழுக்களுக்குள் பிளவை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் மற்றும் பிரச்சாரங்களைத் தடுக்க வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாமல் விடுவது, இலங்கையின் சமூக நல்லிணக்கத்திற்கும், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர் மார்ட்டின்,

LTTE அமைப்பு கனடாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகவே தொடர்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். மற்றும் LTTE அல்லது பிற பிரிவினைவாதக் கொள்கைகளுடன் தொடர்புடைய சின்னங்கள் எதையும் கனடா அங்கீகரிப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் இறையாண்மைக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் கனடா தொடர்ந்து ஆதரவு வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here