Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்- மஹிந்த ராஜபக்க்ஷ

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் நேற்றையதினம்  செவ்வாய்க்கிழமை (02) பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பந்தனின் பூதவுடலுக்கு  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, அஞ்சலி செலுத்தியுள்ளார்.  

மடு அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட முத்திரை வௌியீடு…!

மன்னார் மடு அன்னையின் ஆடிமாதத் திருவிழா இன்று(02.07) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மடு அன்னை அரசியாக முடிசூட்டப்பட்டதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட முத்திரை இன்று(01.07) வௌியிடப்பட்டுள்ளது. மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை அன்ரனி ஞானப்பிரகாசத்தின் ஏற்பாட்டில் இன்று (01.07) முற்பகல் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. தபால்மா அதிபர் ருவன் சத்குமாரவினால் விசேட முத்திரை மன்னார்...

சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 318 வெளியீடும், பல்வேறு உதவிகளும்…!

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 318 வெளியீடு நேற்று காலை 10:45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி அமுதசுரபி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பணாபாட்டு பேரவை உறுப்பினர் ஓய்வு பெற்ற அதிபர் திரு. சிவநாதன் தலமையில் பஞ்சபுராண ஓதுதலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து...

சம்பந்தனின் இடத்திற்கு குகதாசன்..!

காலஞ்சென்ற இரா. சம்பந்தனின் நாடாளுமன்ற  உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தமிழரசுக்கட்சியின் (இ. த .க) பொதுசெயலாளராக செயல்பட்டுவரும்  குகதாசனை நாடாளுமன்ற  உறுப்பினர் பதவிக்கு  நியமிப்பதற்கு பல அழுத்தம் கொடுக்கப்பட்டுவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரா. சம்பந்தன் உயிரிழந்து ஒருனால் முடிவதற்குள் பதவிக்கு போட்டி போடுகின்ற நிலமை தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக கட்சி...

பெற்றோல் விலையில் மாற்றம்..!

நேற்று(30) நள்ளிரவு முதல்  எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 344 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 41 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய...

லொறி மோதியதில் பாதசாரி ஒருவர் பலி…!

குருணாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருணாகல் - தம்புள்ளை வீதியில் முத்தெட்டுகல பகுதியில் லொறி மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியில் பயணித்த பாதசாரி மீது குருணாகலிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து...

வவுனியாவில் காதலிக்கு பயம் காட்ட முயற்சித்த இளைஞன் பலி…!

வவுனியா, நந்திமித்திரகம பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் காதலிக்கு பயம் காட்ட கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில், அது இறுகியதால் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் வவுனியா போகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது 15 வயது காதலியை மிரட்டுவதற்காக கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில், அது கழுத்தில் இறுகி...

கல்கிஸ்ஸை கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூவர் ; இருவர் மீட்பு…!

கல்கிஸ்ஸை கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூவரில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளாதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 17 வயதுடைய  அபேசேகர மாவத்தை, கல்கிஸ்ஸை பகுதியில் வசிக்கும் நபரொருவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸை கடலுக்கு நீராடச் சென்ற மூவர் கடலில் அடித்து செல்லப்பட்ட போது இருவரினை  அங்கு பணியிலிருந்த கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர். இந்நிலையில்...

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது…!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி , 50 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பணத்தினை பெற்றுக்கொண்டு  நீண்ட நாட்களாகியும் இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கவில்லை. இந்நிலையில் , இளைஞன் தனது பணத்தினை திருப்பி கேட்ட போது , அதனை கொடுக்க பெண் மறுத்ததால்,...

புதையல் தோண்ட முற்பட்ட 5 பேர் வவுனியாவில் கைது…!

ஓமந்தை, விளாத்திக்குளம் பகுதியில் வைத்து பூசாரி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஓமந்தைப் பொலிசாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார், விளாத்திக்குளம் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட 5 பேரினை கைது செய்துள்ளனர். கண்டி பகுதியில் இருந்து வருகை தந்த பூசாரி மற்றும் வவுனியாவின்...
- Advertisement -

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...