கல்கிஸ்ஸை கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூவரில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளாதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

17 வயதுடைய  அபேசேகர மாவத்தை, கல்கிஸ்ஸை பகுதியில் வசிக்கும் நபரொருவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்ஸை கடலுக்கு நீராடச் சென்ற மூவர் கடலில் அடித்து செல்லப்பட்ட போது இருவரினை  அங்கு பணியிலிருந்த கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போனவரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here