Saturday, July 11, 2026
No menu items!

News Line

பேருந்தில் தவறி விழுந்து இளைஞன் ஒருவர் பலி..!

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்றைய தினம்  (23) காலை பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையிலிருந்து யாழ் நோக்கி பயணித்த பேருந்தில் சென்ற குறித்த இளைஞன் கீழே விழுந்த நிலையில் பேருந்தின் சில்லுக்குள் நசியுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் யாழிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்தில் பணியாற்றும்...

சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்..!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று (22) ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டமானது இன்று (23) மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த  போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

வவுனியாவில் 67 யானைகள் பலி..!

வவுனியா மாவட்டத்தில் 2019ம் ஆண்டு தொடக்கம் 2024 வரை 67 யானைகள் பலியாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக செட்டிகுளம், நெடுங்கேணி, வவுனியா உட்பட வனத்தினை அண்மித்த பகுதிகளிலில் அனுமதியற்ற சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கியும், வெங்காய வெடி, துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியும் (சட்டவிரோத துப்பாக்கி) தொடருந்து விபத்துக்களாலும் இவை பலியாகியுள்ளன. மேலும் 05 வயது...

ஸ்பெயினில் தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய தீ விபத்து..!

ஸ்பெயினின் வலென்சியா நகரில் கம்பனார் என்ற பகுதியில் உள்ள 14 அடுக்குகளை கொண்ட தொடர்மாடிக்கட்டிடமொன்றில்  நேற்றைய தினம் (22)  பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் பலியானதோடு 14 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு இந்த கட்டிடத்தில் 138 வீடுகள் உள்ளதாகவும் 450க்கும் அதிகமானவர்கள் வசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை..!

இலங்கை மின்சார சபையினால் கையளிக்கப்பட்ட புதிய மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில், அவதானத்தை செலுத்தி மின்கட்டணத்தை குறைப்பதற்கான சதவீதத்தை அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஏ.எம்.ஆர்.எம் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, நேற்றைய தினம்  (22) கையளித்துள்ளது. 2023 அக்டோபர் மாதத்தில் மின்...

அரசியலுக்கு வருமாறு சனத் நிஷாந்தவின் மனைவிக்கு அழைப்பு..!

கடந்த மாதம் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கெரவளபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியை அரசியலுக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே...

40,000க்கும் அதிகமான போலி மருத்துவர்கள்!- ஆபத்தில் மக்கள்..!

நாடு முழுவதிலும் 40,000க்கும் அதிகமானோர் போலி வைத்தியர்களாக செயற்படுவதாக  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அணுவாயுத தாக்குதலை எதிர்கொள்ள இலங்கை தயார்..!

ஏதேனும்  ஒரு சந்தர்ப்பத்தில் அணுவாயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதனால் ஏற்படும் கதிரியக்க நிலைமைகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருப்பதாக அணுசக்தி ஒழுங்குமுறை சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்பு குழு கூடிய போது அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். அதற்குத் தேவையான மனித வளங்களும், தேவையான உபகரணங்களும் தங்களிடம் இருப்பதாக அணுசக்தி ஒழுங்குமுறை சபையின்...

இலங்கை வரவுள்ள பசில் ராஜபக்ச..!

அமெரிக்கா சென்றுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவின் திடீர் வருகையை  கட்சியின் உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பொதுஜன பெரமுன கட்சி முழுவதையும் நாமல் ராஜபக்ச தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அதனால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை சமாளிக்கும் நோக்கில் பசில் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பசிலை மீண்டும் அழைத்து வருவதற்கு எஸ்.எம்.சந்திரசேன உட்பட...

இன்றைய வானிலை முன்னறிவிப்புகள்.

மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...