Friday, July 10, 2026
No menu items!

News Line

உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை நடைபெறும் காலம் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 2024 மே - ஜூன் மாதங்களிலும், உயர்தரப் பரீட்சை 2024 டிசம்பர் மாதத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த அறிவிப்பை...

சுகாதார துறையுடன் தொடர்புடைய பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்..!

சுகாதார சேவைளுடன் தொடர்புடைய பல சேவை நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  உத்தரவில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்  ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் போன்றவற்றில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, உணவு, சிகிச்சை போன்றவற்றிற்கு தேவையான அனைத்து சேவைகள், உழைப்பு அல்லது தேவையான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய...

இஸ்ரேல் தாக்குதலில் 100க்கு மேற்பட்டோர் பலி..!

ரஃபாவில் நகர் மற்றும் பல பகுதிகளை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட வான்வெளி தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ரஃபாவை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தீவிரமான விமான தாக்குதல்கள் மற்றும் எறிகணை தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள் சிறுவர்கள் உட்பட 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன செம்பிறை சமூகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்தவர்கள் இடிபாடுகளிற்குள் உள்ளதால் உயிரிழப்புகள்...

அலி சப்ரி ரஹீமின் கார் விபத்து.

இன்று(13) அதிகாலை புத்தளத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கி நாடளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் அதே திசையில் சென்ற சிறிய ரக உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இதில் ஒருவர்  காயமடைந்துள்ளதாகவும் சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த காரின் சாரதி  கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன்...

வெப்ப அதிகரிப்பால் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்..!

தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் தோல் நோய்கள் பரவி வருவதாகவும், இந்த நிலைமை குழந்தைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும்  சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அத்துடன் குழந்தைகளை தண்ணீர் மற்றும் திரவங்களை முறையாக குடிக்க அனுமதிக்கவில்லை என்றால், அவர்கள் வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடும் என்றும்...

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(13) காலை 6.30 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி  பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதையடுத்து  நிதி அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததன் காரணமாக மீண்டும்  வேலை நிறுத்தப் போராட்டம்...

அடுத்த 20 வருடங்களுக்கு ரணிலே ஜனாதிபதி.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமோக வெற்றியீட்டுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமொன்றிலே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர் என்ற சாதனையுடன் ரணில் ஜனாதிபதி பதவியில் மீண்டும் அமர்வார் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன்...

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவி..!

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயாராக இருந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்றைய தினம் (12) தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பிரதேசத்தை சேர்ந்த  18 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் பெற்றோர்கள் உறவினர்கள் இல்லாத நிலையில் மாணவி தனது அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து தூக்கில் தொங்கிய...

இலங்கை அணி அபார வெற்றி..!

நேற்றைய தினம்(11) இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றிருந்தது. பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை...

அமெரிக்க ஹவாய் தீவில் நிலநடுக்கம்..!!

அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிக் ஐலண்ட் பகுதியில் 5.7  ரிக்டர்  அளவுகோலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக   அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லையென  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...