Friday, July 10, 2026
No menu items!

News Line

தொடரைக் கைப்பற்றியது இலங்கை..!

நேற்றைய தினம்(15) இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நடைபெற்றிருந்தது. பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 48.2 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து...

பல குழப்பங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு புதிய பிரதமர்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற்ற நிலையில் அந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசு அமைப்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும்...

காதலர் தினம் கொண்டாட வராத காதலி: காதலன் எடுத்த முடிவு

இறக்குவானை பிரதேசத்தை சேர்ந்த சத்தியசீலன் அரவிந்த் பிரசாத் என்ற 21 வயதுடைய இளைஞன் காதலியால் ஏற்பட்ட மனவேதனையால் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனவும், அவரது தந்தை கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும், மேலும் இரு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த திடீர் மரணம் தொடர்பில் உயிரிழந்த...

கொழும்பில் சுற்றி திரிந்த மர்ம பெண்: வெளிவந்த தகவல்

கந்தானை நகரில் கடந்த சில நாட்களாக, மரியாள் போன்று உடையணிந்து சுற்றித் திரிந்த பெண் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக கந்தானை நகரில் வெண்ணிற ஆடை அணிந்து உலாவந்ததுடன் அவர் ஒரு வெளிநாட்டுப் பெண்ணாக சந்தேகிக்கப்படலாம் என்றும், மரியாளின் சாயலைச் சித்தரிப்பதாகவும் இதனடிப்படையில் இந்த சம்பவம்...

இலங்கையில் முகநூல் தொடர்பில் 30 ஆயிரத்துக்கும் அதிக முறைப்பாடுகள்..!

இலங்கையில் முகநூல் குற்றங்கள் தொடர்பில் 2023ம் ஆண்டில் 31,548 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஸ்ட பாதுகாப்பு பொறியியலாளர் சாருக அமுனுபொல இதனை தெரிவித்துள்ளார். இம்முறைப்பாடுகளில் அதிகளவானவை முகநூல் ஊடாக பெண்களை துன்புறுத்திய சம்பவங்கள் தொடர்பானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான 10,774 முறைப்பாடுகள் நாடு முழுவதிலும் பதிவாகியுள்ளதுடன், போலி முகநூல் கணக்குகள் தொடர்பில்...

நிறைவுக்கு வந்தது சுகாதார தொழிற்சங்கங்களின் பணி பகிஷ்கரிப்பு !

கடந்த இரு தினங்களாக தொடர்ந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பானது இன்று (15) காலை 6.30 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடப்படுமென சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன அறிவித்ததையடுத்து குறித்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. அத்துடன் சுகாதாரத்துடன் தொடர்புடைய அத்தியாவசிய சேவைகளை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கமைய அதிவிசேட...

உலக சாதனையாளர் உயிரிழப்பு..!

ஆடவர் மரதன் ஓட்டப் போட்டியில் உலக சாதனை படைத்துள்ள கென்யாவைச் சேர்ந்த கெல்வின் கிப்டும் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேற்குக் கென்யாவில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற வீதி விபத்தில் 24 வயதான கெல்வின் கிப்டும் மற்றும் அவரது பயிற்சியாளரான ருவண்டா நாட்டைச் சேர்ந்த கர்வைஸ் ஹகிசமானாவும் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு சிக்காகோவில் நடைபெற்ற நெடுந்தூர...

செவ்வாய் கிரகத்தில் குடியேறும் எலோன் மஸ்க்கின் திட்டம்..!

செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்பை அமைக்கும் திட்டமொன்றை தொழிலதிபர் எலோன் மஸ்க் மீண்டும் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார். ஒரு மில்லியன் புவிவாசிகளை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் உருவாக்கி வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், செவ்வாய் கிரகத்தில் மக்கள் வாழ்வதற்கு ஏற்றவாறான சூழலை அமைப்பதற்காக ஒரு தன்னிறைவு சூழலியல் அமைப்பை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேநேரம், பூமியிலிருந்து...

இலங்கை இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

நாட்டில் தீங்கு விளைவிக்கும் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தி பக்கவிளைவுகளுடன் பொது மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளூர் சந்தையில் இவ்வாறான தயாரிப்புகள் பயன்படுத்துவதனை கட்டுப்படுத்துவது பாரிய சவாலாகியுள்ளதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவற்றில் அதிக எண்ணிக்கையிலான தயாரிப்புகள் தீங்கு விளைவிக்கும் வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களாகும். அவை எந்தவொரு சிறப்பு அதிகாரத்திலும்...

கிராம உத்தியோகத்தர்கள் புதிதாக சேவையில்..!

நாட்டில் தற்போது சுமார் 2,800 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்ற நிலையில் புதிதாக கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 2100 கிராம உத்தியோகத்தர்கள் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்துள்ளார். மேலும் கிராம உத்தியோகத்தர்களை...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...