Friday, July 10, 2026
No menu items!

News Line

பிரான்ஸ் நாட்டின் இளம் பிரதமராக கேப்ரியல் அட்டல்

பிரான்ஸ் நாட்டின் கல்வித்துறை அமைச்சராக இருந்த  கேப்ரியல் அட்டல்  (GabrielAttal)  அதிபர் இமானுவேல் மேக்ரானால் நேற்றைய தினம் (09) பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் வரலாற்றில் 34 வயது இளம் பிரதமர் என்ற அந்தஸ்தை கேப்ரியல் அட்டல் பெற்றிருக்கிறார். எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு முன்னதாக நேற்றைய தினம் (09) எலிசபெத் போர்ன்  பதவி விலகியதை தொடர்ந்து  அவருக்கு...

இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ள பிரித்தானிய இளவரசி

பிரித்தானிய இளவரசி அன்னே பிரின்ஸஸ் ரோயல் (Anne, Princess Royal) இன்று (10) 5 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு பல நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவே, இவர் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இளவரசி அன்னே நாளை (11) வட மாகாணத்திற்கு...

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஜப்பான் நிதியமைச்சர்

ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அதன்படி எதிர்வரும் ஜனவரி 11 மற்றும்12 ஆம் திகதிளில் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமைச்சர் சுசுகி ஷுனிச்சி மற்றும் அவரது குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும்...

முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 2 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. கொழும்பு R. பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. சிம்பாவே அணி 44.4 ஓவர்களில் 208 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில்...

தாய்வான் மக்களின் முடிவை மதிக்க சீனாவுக்கு உத்தரவு

சீனாவுடனான உறவானது மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று தாய்வான் ஜனாதிபதி சாய் இங் வென் தெரிவித்துள்ளார். தாய்வானானது     சீனாவுடன் ஒன்றிணைவது தவிர்க்க முடியாதது என்று சீனத் தலைவர் தெரிவித்துள்ள பின்புலத்தில் தாய்வான் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாங்கள் ஒரு ஜனநாயக நாடு. சீனாவுடனான உறவுகளைப் பேணுவதற்கு ஜனநாயகக் கொள்கை மிக...

இஸ்ரேலின் தாக்குதலில் பலியான ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி பலியாகியுள்ளதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் துணை தலைவர் உயிரிழந்தார். இச் சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்குப் பின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் ராணுவ நிலையங்கள் மீது ஏவுகணை தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இவ் வேளையில் ஹிஸ்புல்லா தளபதி பயணித்த கார் மீது...

ரூ.80 கோடி 40 இலட்சம் அபின் கஞ்சா பொதிகள் மீட்பு

வட மாகாணத்தில் வரலாற்றில் முதன் முறையாக 86 கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான அபின் மற்றும் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கற்கோவளம் கடற்கரையில் வைத்து நேற்று(08) பருத்தித்துறை பொலிஸார் இவற்றை மீட்டுள்ளனர். வல்லிபுர ஆழ்வார் ஆலய தீர்த்தக் கடற்கரை பகுதியில், படகில் பயணம் செய்த மர்ம நபர்களால் பொதியொன்று வீசப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாருக்குகிடைத்த  தகவலை அடுத்து...

திருத்தியமைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் ஆதரிக்கமாட்டோம் – ரிஷாட்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்  திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், வேறு நாடுகளின் கொந்தராத்துக்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமாக இருந்தால் அதனை ஆதரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்  “ தற்போது நாட்டில் வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலை...

பராக்கிரமபாகுவிற்கு பின் கடலெல்லையை பாதுகாக்கும் ரணில் விக்கிரமசிங்க

செங்கடல் ஊடாக இலங்கைக்கு வரும் சரக்குக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கொழும்பு உள்ளிட்ட இலங்கை துறைமுகங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின் பின்னர் சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்க இலங்கையில் இருந்து கப்பல்கள் அனுப்பப்படுவது இதுவே முதல் தடவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போர்க்கப்பலை செங்கடலில் நிலைநிறுத்தி அந்த...

2024 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு சற்றுமுன்னர் ஆரம்பம்.

நாடாளுமன்றமானது  இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் இன்று...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...