திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக 2 வாக்குகள் கிடைத்தன.
பணமோசடி மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி வழங்குவதை தடுப்பதற்கான சர்வதேச தரங்களுக்கு அமைய குறித்த சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.







