யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் நேரத்தில் வெப்ப சுட்டெண், (மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பம்), அவதானம் தேவைப்படும் மட்டத்தில் காணப்படலாம் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் நீரை அதிகம் அருந்துவதுடன், நேரடி சூரிய வெளிச்சத்தை தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.







