Friday, July 10, 2026
No menu items!

News Line

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்ன?

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து ஐக்கியமக்கள் சக்தி கட்சியானது ஆராயவுள்ளது. இது தொடர்பான கட்சியின்கூட்டம் இன்று (08) இடம்பெறவுள்ளது. மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான  ரஞ்சித் மத்துமபண்டார பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் இச் சட்ட திருத்தங்கள் குறித்து...

தமிழர் பகுதியில் கிணற்றுக்குள் இருந்து வரும் மண்ணெண்ணெய்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணெய் வெளியேறி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த விடயம் நேற்று (07) கண்டறியப்பட்டுள்ளதாக உடையார் கட்டு கிராம சேவையாளர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குரவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று மழை வெள்ளத்தினால் கிணறுக்குள் வெள்ள நீர் நிரம்பியுள்ள...

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை விஜயம் .

நாட்டின் சமகால பொருளாதார நிலவரம் தொடர்பில் மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்  குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர். நாட்டின் அண்மையகால பொருளாதார நிலவரம் குறித்தும், சர்வதேச நாணய நிதியத்தினால் வலியுறுத்தப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டங்களின் அடைவுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்தும் மதிப்பீடு செய்வதற்காகவே இக்குழு வருகைதரவுள்ளது என நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர்...

இலங்கையின் 15 ஆவது சனத்தொகை கணக்கெடுப்பு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 15 ஆவது சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பானது இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ளதாக  அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கொழும்பு மாவட்டச் செயலாளர் கே.ஜி. விஜேசிறி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த கனக்கெடுப்பானது  எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. நாடு முழுவதும் மக்கள்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்புத்...

பிரபல நடிகையை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த ஆட்டோ சாரதி!

ஜாலியகொட பகுதியில்  ஆட்டோவில் சென்று கொண்டிருந்த  23 வயதுடைய பிரபல நடிகை ஒருவரை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்துள்ளதாக குறித்த நடிகை பிலியந்தலை பொலஸ்நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளார். மேலும் மொரட்டுவ கட்டுபெத்த பிரதேசத்திலிருந்து முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென முச்சக்கரவண்டியை  வீதிக்கு அருகில் நிறுத்தி, தொழில்நுட்ப கோளாறை சரிபார்ப்பதாக கூறிய சாரதி,...

மக்களை உடனடியாக முகக்கவசம் அணியுமாறு பொலிஸார் கோரிக்கை

கொழும்பு புறநகர் பகுதியான ஹோமாகம கைத்தொழில் வலயத்தை சுற்றியுள்ள மக்களை உடனடியாக முகக் கவசம் அணியுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டு நச்சு வாயு சூழலில் பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  தீப்பிடித்த குறித்த தொழிற்சாலையில் திருத்த பணிகள் இடம்பெற்று...

யாழ். மருந்தகம் ஒன்றில் மீட்கப்பட்ட போதை மாத்திரைகள்

போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் யாழில் உள்ள மருந்தகம் ஒன்றின் ஊழியர் உட்பட இருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நகர பகுதியில் வியாபார நோக்கத்துடன்  ஆயிரத்து 100 போதை மாத்திரைகளுடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பிரபல மருந்தகத்தின் ஊழியர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த மருந்தகத்தில் நேற்றைய...

இன்றும் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்...

தன்னிச்சையான கைதுகளை நிறுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

தன்னிச்சையான கைதுகள், காவல்துறையினரின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் மற்றும் கொலைகளை நிறுத்துமாறு , அதிகாரிகளிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நீதிச்செயன்முறை நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டுமெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றின் ஊடாக கோரியுள்ளனர். அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தன்னிச்சையான கைதுகள், பிடியாணையற்ற காவல்துறை சோதனைகள் மற்றும் சட்டவிரோத கொலைகள் தொடர்பில் இலங்கை...

இன்று முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம்

6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை (சின்னமுத்து) தடுப்பூசி மேலதிக டோஸ் இனை வழங்கும் வேலைத்திட்டம் இன்று(06) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொற்றுநோயியல் துறை பிரதம விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களை முதன்மையாகக்...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...