Friday, July 10, 2026
No menu items!

Updates

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோர்டான்

கட்டாரில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி நேற்றைய தினம்(06) அஹமட் பின் அலி மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் ஜோர்டான் மற்றும் தென் கொரியா ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜோர்டான் அணி வெற்றி பெற்று சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஜோர்டான்...

வெளிநாட்டில் இலங்கையர்கள் பணியாற்றும் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து

தென் கொரியாவில் நாசு நகரில் உள்ள இலங்கையர்கள் பணியாற்றும் தொழிற்சாலையில் காலை 11.00 மணியளவில்  பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விபத்தானது தொழிற்சாலை  மின் கசிவினால்  ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  பணியில் இருந்த 45 ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன்  540 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் சுமார் 200 பேர்...

ஆவா குழு தொடர்பில் வெளியான அதிர்ச்சியான தகவல்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும்  ஆவா குழுவின் உறுப்பினர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபர் வெளிநாடு செல்வதற்காக கொழும்பு வலான பிரதேச வீடொன்றில் தங்கியிருந்தபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்  இக் குழுவை   இயக்குபவர்கள் ஐரோப்பாவில் வசிப்பதாக  தெரிவித்துள்ளார். மேலும் ஆவா குழுவின் இலச்சினையில் உள்ள '001'...

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதியவர்

அநுராதபுரம் - நொச்சியாகம பிரதேசத்தில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 32 வயதுடைய காதலனும் 51 வயதுடைய முதியவருமாவர். பாதிக்கப்பட்ட சிறுமி  தனது பாட்டி சுகயீனமடைந்ததன் காரணமாக அவரது  வீட்டுக்கு தங்குவதற்காக சென்றிருந்த நிலையில் 32 வயது இளைஞருடன் காதல் தொடர்பை பேணியுள்ளார். இந்த காதல் தொடர்புக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின்...

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் தாயார் காலமானார்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலை தனது 84 ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை (5) காலமானார். அவரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படது. அன்னாரது பூதவுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரும், அரசியல் பிரதிநிதிகளும் அஞ்சலி...

மட்டக்களப்பில் வீடுகள் பறிமுதல் காலக்கெடு

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் நிரந்தரமாக குடியிருக்காத, உரிமையாளர்கள் இல்லாத வீடுகளை மீளப் பெற்று அவைகளை வீடுகள் இல்லாதவர்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர், வீடமைப்பு அதிகார சபை, காணி சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நேற்று நடைபெற்ற செங்கலடி அபிவிருத்திக் குழு...

இராஜினாமா செய்த கெஹெலிய ரம்புக்வெல்ல..!

சுற்றாடல் அமைச்சுப் பதவியிலிருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்துள்ளார். அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அதனை ஏற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்து (Immune Globulin) தடுப்பூசி கொள்வனவு தொடர்பில் கடந்த பெப்ரவரி 02ஆம் திககதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கெஹெலிய...

இன்றைய வானிலை முக்கிய அறிவிப்புகள்

நாடு முழுவதும் இன்றைய தினம் (07) மழையற்ற சீரான  வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும். நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ,...

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு SSC மைதானத்தில் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை...

சிலியில் பாரிய காட்டுத் தீ

சிலி நாட்டில் பரவி வரும் பாரிய காட்டுத்தீயினால் இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மேலும் அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக்கும்  ஞாயிற்றுக்கிழமை எச்சரித்துள்ளார். மேலும் திங்கட்கிழமை 10 பேர்  தீயில் சிக்கி உயிரிழந்தனர். அத்தோடு, உயிழப்புகளின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக என சிலியின் தடயவியல் மருத்துவ சேவையின்...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...