Friday, July 10, 2026
No menu items!

Updates

இன்றைய நாளுக்கான வானிலை..!!

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு காற்றலையின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். கிழக்கு, மத்திய மற்றும் ஊவா...

இன்றையன நாளுக்கான வானிலை..!!

கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். கிழக்கு காற்றலை தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கும் தொடரக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். கிழக்கு...

இன்றைய நாளுக்கான வானிலை ..!!

இலங்கைக்கு மேலாக வீசுகின்ற கிழக்கு காற்றலை வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கும் தொடரக்கூடும். வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை...

ஈரான் கண்டனம் சிட்னியில் நடத்தப்பட்ட தாக்குதல்..!!!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பொன்டாய் கடற்கரையில் நடத்தப்பட்ட தாக்குதலை ஈரான் கண்டித்துள்ளது. பயங்கரவாதமும் மக்களைக் கொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாய் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். இவ்வாறான செயல்கள் எங்கு நடந்தாலும் அதனை ஈரான் கண்டிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிட்னியில் உள்ள பொன்டாய் கடற்கரையில் நேற்று(14.12.2025) கூடியிருந்த மக்களை...

அரச பேருந்தில் செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது..!!

நவம்பர் மாதத்திற்கான பயண அட்டையைப் (Season card) பயன்படுத்தி, இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பாடசாலை மாணவர்களுக்கு பயணிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதம் வழங்கப்பட்ட பயணச் சீட்டை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். மேலும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

கிழக்குப் பிராந்தியத்தில் காணப்படும் அலைவடிவிலான காற்றின் தாக்கம் காரணமாக நாளை(16.12.2025) முதல் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிளும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...

நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு பெண்ணின் புகைப்படத்தை இணையத்தில் முறைகேடாக மாற்றிய மாணவி..!!!

கொழும்பைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் புகைப்படங்களை டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி ஆபாசமான படங்களாக மாற்றி இணையத்தில் வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட இளம் பெண் ஒருவருக்கு கொழும்பு தலைமை நீதவான் அஸங்க எஸ். போதரகம நேற்று ரூபா 50,000 நட்டஈடு மற்றும் ரூபா 5,000 தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் மீது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட...

பாடசாலைக்குள் மது அருந்திய மாணவிகள்..!!

தமிழகத்தின் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மதுபானம் அருந்திய மாணவிகள் 6 பேர் கற்றல் செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். மாணவிகள் மதுபானம் அருந்தும் காணொளிகள் வெளியாகிய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.  

முதல் நாளில் பட்டையைக் கிளப்பும் வசூல் ,படையப்பா திரைப்படம்..!!!

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளைமுன்னிட்டு, நேற்று(12.12.2025) படையப்பா திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. 1999ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் சௌந்தர்யா, சிவாஜி கணேசன், மணிவண்ணன் என்று பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம் படையப்பா. இத்திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆகிய நிலையில் படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. இப்படியான நிலையில் படையப்பா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளன. படையப்பா திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ.4.5...

போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கை..!!

நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தங்களது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் கூறியுள்ளார். பண்டிகை காலங்களில்  போலி நாணயத்தாள்களின் புழக்கம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...