நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளைமுன்னிட்டு, நேற்று(12.12.2025) படையப்பா திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது.

1999ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் சௌந்தர்யா, சிவாஜி கணேசன், மணிவண்ணன் என்று பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம் படையப்பா.

இத்திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆகிய நிலையில் படம் மறுவெளியீடு செய்யப்பட்டது.

இப்படியான நிலையில் படையப்பா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளன.

படையப்பா திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ.4.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இனிவரும் நாட்களிளும் இத்திரைப்படம் அதிக வசூல் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here