Saturday, July 11, 2026
No menu items!

Updates

காசா பகுதிக்கான உணவு விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை..!

கடந்த ஞாயிற்றுக்கிழமை(18), வடக்கு காசாவிற்கு உணவு எடுத்துச் சென்ற வாகனம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதன் காரணமாக வடக்கு காசா பகுதிக்கான உணவு விநியோகத்தை நிறுத்த உலக உணவு திட்டம் முடிவு செய்துள்ளது. உணவு விநியோகம் செய்யும் பாரவூர்திகள் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்படுவதன் காரணமாகவே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன்  உணவு...

வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு எச்சரிக்கை..!

இந்த நாட்களில் வீடுகளை வாடகைக்கு விடும்போது பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் காரணமாக சில ஆட்கடத்தல்காரர்கள் வீடுகளை விட்டு வெளியேறி வாடகைக்கு வீடுகளை பெற்றுக்கொண்டு ஒளிந்து கொள்ள முயற்சிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதேவேளை, பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள...

இலங்கைப் பொலிஸார் மீது சீன பெண் தாக்குதல்..!

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீன பெண் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை குறித்த சீன பெண் கடுமையாக தாக்கியுள்ளார். குறித்த பெண் வீசா இன்றி தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைகளை மேற்கொள்ள சென்றிருந்த நிலையில், இங்கு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

மன்னாரில் புதிய காற்றாலை..!

மன்னாரில் புதிய காற்றாலை ஒன்றை அமைப்பதற்கு கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதே பகுதியில் 100 மெகாவோட் காற்றாலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதிய காற்றாலை 50 மெகாவோட் திறனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் காற்றாலை...

தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு..!

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். மாகாண சபைகளிடம் இருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் வகையில் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அவர் முன்வைத்துள்ளார். பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதனால் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் முன்னதாக 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் படி, மாகாண...

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்..!

இலங்கையில் உள்ள பல பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக  தேசிய வள பாதுகாப்பு இயக்கத்தினால்  இன்றைய தினம்(21) ஆர்ப்பாட்டம்  ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய வள பாதுகாப்பு இயக்கம் அறிக்கையொன்றின் மூலம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,“மின்சாரம், தொலைத்தொடர்பு, காப்பீடு,...

இன்றைய வானிலை அறிவிப்பு ..!

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மற்ற இடங்களில் முக்கியமாக சீரான வானிலை நிலவும். மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடமத்திய, வடமேல், ஊவா, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி...

கிளிநொச்சியில் கூடும் இலங்கை தமிழரசு கட்சி..!

இலங்கை தமிழரசு  கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 23ஆம் திகதி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் தேசிய மாநாட்டிற்கு தடைகோரி, திருகோணமலை மற்றும் யாழ் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சந்திப்பில் கட்சியின் உட்கட்சி...

யாழில் பெண்னொருவர் மீது வாள்வெட்டு..!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் பெண்ணொருவர் மீது நேற்றிரவு (19) வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் காயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் காவல்துறையினால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாள்வெட்டு நடத்தப்பட்டமைக்கான காரணம்...

தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்யும் இலங்கை..!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T 20 தொடரின் இரண்டாவதும் போட்டி நேற்றைய தினம்(19) நடைபெற்றிருந்தது. ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...