யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் பெண்ணொருவர் மீது நேற்றிரவு (19) வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் காயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் காவல்துறையினால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாள்வெட்டு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here