பன்குடாவெளியை சேர்ந்த மாணவன் நேற்று (01.11.2023) வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பு சித்திகளை பெற்று தமது சமூகத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
ராஜேந்திரபிரகாஷ் பிரகதீஸ்வரன் என்ற மாணவனே சாதாரண தரப் பரீட்சையில் 9 A சித்திகளை பெற்றுள்ளார்.இம் மாணவரை கற்பித்த பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களுக்கும் பன்குடாவெளி வாழ் மக்கள் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் முகநூலில் தெரிவித்து வருகின்றனர்.