Tamil News Channel

Blog Post

Tamil News Channel >

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கான கேள்வி அதிகரிப்பு..!

2024ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 13ஆம் திகதி நிலவரப்படி, குறித்த எண்ணிக்கை 300,162 ஆகும். கடந்த 10 வருட காலப்பகுதியில் 3 இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்ற இரண்டாவது தடவை இதுவாகும். இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டில் 310,948 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். 2024 ஆம் ஆண்டில், 177,804 ஆண் மற்றும் 122,358 பெண் தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர். […]

Read More

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிவிப்பு..!

2024 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் 01 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை 300,162 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அவர்களில் 177,804 ஆண்களும் 122,358 பெண்களும் உள்ளடங்குவர். தென் கொரியாவுக்கு 7,002 பேரும், இஸ்ரேலுக்கு 9,211 பேரும், ருமேனியாவுக்கு 10,274 பேரும், ஜப்பானுக்கு 8,251 பேரும் வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் […]

Read More

வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி பாரிய பண மோசடி..!

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மாத்தறை , கொட கமவில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ருமேனியாவில் தொழில் வழங்குவதாக பணம் வசூலித்ததாகவும், அந்த வேலை வாய்ப்புகளை வழங்கவில்லை எனவும் பணியகத்திற்கு 53 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்படி, குறித்த சந்தேகநபரால் சுமார் 1கோடி 30 இலட்சம் ரூபாவுக்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி […]

Read More

ருமேனியாவில் மேற்கொண்ட ஆய்வு…

தற்போது தொடர்ந்து வரும் காலநிலை பிரச்சினைகளை சமாளிக்க காட்டெருமை உதவும் என ருமேனியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. 200 வருடங்களுக்கு முன்பு ருமேனியாவில் காணாமல் போன ஐரோப்பிய காட்டெருமைகளை ரீவில்டிங் ஐரோப்பா மற்றும் WWF ருமேனியா ஆகிய அமைப்புக்கள் மீட்டெடுத்தன. இந்நிலையில் குறித்த ஆய்வில், 170 காட்டெருமைகள் கிட்டத்தட்ட 2 மில்லியன் கார்களிலிருந்து வெளிவரும் கார்பன் டை ஒக்சைட்டை கைப்பற்றி மண்ணில் தக்க வைக்குமாம். புற்களை உண்ணும் இந்த காட்டெருமைகளின் கழிவுகள் மண்ணை உரமாக்கும் […]

Read More

ஷெங்கன் வலயத்தில்  இணைந்துள்ள 2நாடுகள்..!

ஐரோப்பாவின் ஷெங்கன் விசா வலயத்தில் ருமேனியாவும் பல்கேரியாவும் நேற்று முன்தினம் (31) பகுதியளவில்  இணைந்துள்ளன. இதன் மூலம் இவ்விரு நாடுகளுக்கும் ஏனைய ஷெங்கன் வலய நாடுகளுக்கு இடையில்  கடல் மற்றும் வான் வழியாக விசா  சோதனைகளின்றி பயணம்செய்ய முடியும். ருமேனியாவும் பல்கேரியாவும் 2007 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன. எனினும், விசா கட்டுப்பாடுகள் அற்ற ஷெங்கன் வலயத்தில்    இணைவதற்கு இந்நாடுகள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்நாடுகளின் ஷெங்கன் விண்ணப்பத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் 2011 ஆம் ஆண்டு அங்கீகரித்தது. எனினும் அதே வருடம் ஐரோப்பிய அமைச்சர்   அவையில் அது தோற்கடிக்கப்பட்டது. திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள், சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் ருமேனியாவும் பல்கேரியாவும் போதிய நடவடிக்கை   எடுக்கவில்லை என பல நாடுகள் குற்றம் சுமத்தி வந்தன. இந்நிலையில், மார்ச் 31 […]

Read More