திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது.
இதற்கமைவாக சில வர்த்தக வங்கிகள் டொலருக்கான விற்பனை விகிதத்தை 326.00 ரூபா வரையில் குறைத்துள்ளன.
தேசிய சேமிப்பு வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 325.50-லிருந்து ரூ. 321.5 ஆகவும், ரூ. 334.50-லிருந்து 330.5 ரூபாவாகவும் குறைந்துள்ளன.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 320.58-லிருந்து ரூ. 321.57 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 329.66-லிருந்து ரூ. 330.67 ஆகவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கமர்சியல் வங்கியில், கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 324.47-லிருந்து ரூ. 314.04 ஆகவும், ரூ. 335.50-லிருந்து ரூ. 326.00 ஆகவும் குறைந்துள்ளன.
சம்பத் வங்கியில், கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் ரூ. 321.50-லிருந்து ரூ. 318 ஆகவும், 330.50-ரூபாவிலிருந்து ரூ. 327 ரூபாவாகவும் குறைந்துள்ளன.







