ருமேனியா நாட்டில் வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்து மோசடி செய்தமை தொடர்பாக, ஹங்குரங்கெத்த பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபர், பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கடந்த மே 01 ஆம் திகதி அன்று கைது செய்யப்பட்டார்.

ருமேனியாவில் கட்டுமானத் துறையில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, குறைந்தது 16 நபர்களிடமிருந்து 21.3 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக குறித்த நபர் மீதும் அவரது மனைவி மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பணம் பெற்ற பின்னரே அவ்விருவரும் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை வழங்கியதாகப் புகார் வழங்கியவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

முக்கிய சந்தேக நபர் இதற்கு முன்னர் இரண்டு ஆண்டுகள் ருமேனியாவில் பணியாற்றிய அனுபவத்தை, மோசடியை நடத்துவதற்குப் பயன்படுத்தியமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் ரிக்கில்லகஸ்கடவில் உள்ள தனது இல்லத்திலிருந்து தப்பிச் சென்று, பின்னர் கடுகன்னாவவில் உள்ள வாடகை வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விசாரணை அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) அதிகாரிகளின் உதவியுடன் நடத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here