Sunday, November 8, 2026
No menu items!

அமெரிக்கா

அமெரிக்காவில் காட்டுத்தீ விபத்து; 2000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீ, அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தீயை அணைக்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்டுத்தீயினால் சுமார் 4000 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி 2000க்கும் மேற்பட்ட மக்கள் தமது குடியிருப்புக்களிலிருந்து...

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம் பிரகடணம்!

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை நியமிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, அரசு நிறுவனங்கள் பிற மொழிகளில் ஆவணங்கள் மற்றும் சேவைகளை வழங்கலாமா வேண்டாமா என்பதைத் தேர்வுசெய்ய வாய்ப்பு உள்ளது. புதிய சட்டம், ஆங்கிலம் பேசாதவர்களுக்கு மொழி உதவி தேவை என்று முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் கையெழுத்திட்ட 2000 ஆம் ஆண்டு...

வெளிநாடுகளுக்கான உதவியை நிறுத்திய அமெரிக்கா; இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு!

அமெரிக்கா, வெளிநாடுகளுக்கான உதவியை நிறுத்தியிருப்பது இலங்கையில் பல முக்கியமான திட்டங்களைப் பாதிக்கிறது என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - ஆண்ட்ரே ஃபிரஞ்ச் தெரிவித்துள்ளார். அவற்றில் உணவுப் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள், ஜனநாயக நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, எல்லைப் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வு முகாமைத்துவம் போன்ற திட்டங்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின்...

புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய அமெரிக்கா!

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘Gold Card’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுத்து அதனைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் சட்டவிரோதமாகக் குடியேறிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை நாடு கடத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில், அமெரிக்காவில்...

துப்பாக்கி பிரயோகத்தால் மூவர் உயிரிழப்பு..!

அமெரிக்காவில் அடையாளந்தெரியாத ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான 02 பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரித்தானியாவை பின்தள்ளிய சீனா!

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்ற சாதனையை சீனா படைத்துள்ளது. ப்ரேண்ட் பினான்ஸ் இன்ஸ்டிட்டியூட் (Brand Finance Institute) ஆறாவது முறையாக வெளியிட்டுள்ள பூகோள மென்சக்தி சுட்டெண் (Global Soft Power Index)அறிக்கையில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது இந்த தரப்படுத்தலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் கருதப்பட்ட 8 அடிப்படைக் காரணிகளில் 6 மற்றும் அளவிடப்பட்ட மூன்று...

ட்ரம்பின் புதிய திட்டம்..!

அமெரிக்காவில் பணியிலிருந்து நீக்கிய நுாற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்களை, மீண்டும் பணியமர்த்த ட்ரம்பினுடைய  நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில், சமீபத்தில் நுாற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்கள், திடீரென, கடந்த வாரம் பணியில் இருந்து நிறுத்தப்பட்டனர். பணியிலிருந்து நிறுத்தப்பட்டதாக பலருக்கும், மின்னஞ்சல்கள்  அனுப்பப்பட்டன. அவற்றை படிக்காமல், அலுவலகம் வந்தவர்கள், உள்ளே செல்ல அனுமதிக்கப்படாமல் திருப்பியனுப்பப்பட்டனர். பணியிலிருந்து...

எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்திற்கு செல்லவேண்டும்; பிரபல எழுத்தாளர்!

அமெரிக்காவின் கோடீஸ்வரர் எலான் மஸ்க் கருத்து சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றார் என குற்றம்சாட்டியுள்ள பிரபல எழுத்தாளர் சல்மான் ருஸ்டி அவர் செவ்வாய் கிரகத்திற்கு செல்லவேண்டும் என தெரிவித்துள்ளார். வெளிப்படையாக கருத்துதெரிவிப்பவரும் கொலைமுயற்சியிலிருந்து உயிர் தப்பியவருமான சல்மான் ருஸ்டி கருத்து சுதந்திரம் தொடர்பில் எலான் மஸ்க்கின் நிலைப்பாடு குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். மஸ்க்கின் எக்ஸ் தளம் உண்மையாகவே...

யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம்!

எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தின் கீழும் யுக்ரைனில் உள்ள நேட்டோ நாடுகளின் அமைதி காக்கும் படைகளை தங்களது நாடு ஏற்றுக்கொள்ளாது என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov) தெரிவித்துள்ளார். யுக்ரைனில் இடம்பெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் அமெரிக்கா மற்றும் ரஷ்யப் பிரதிநிதிகளுக்கு இடையில் சவுதி அரேபியாவில் நேற்று இடம்பெற்ற...

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் ட்ரம்ப்..!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியை ட்ரம்ப்  தீவிரப்படுத்தி வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவில்  சட்டவிரோதமாகக்  குடியேறிய இந்தியர்கள் மற்றும்  மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த 200 பேரை விமானம் மூலம் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவுக்கு விமானம் மூலம் நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அங்கிருந்து அகதிகள் முகாம்களுக்கு அழைத்து செல்லப்படும் 200 பேரும் பின்னர்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img