Thursday, November 19, 2026
No menu items!

ஆறு பிள்ளை

இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (17) பிற்பகல் 2:00 மணியளவில், வலையை எறிந்து கொண்டிருந்தபோது, தவறி நீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில், சாந்தபுரத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பிச்சை துரைராசா என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்க தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் இன்று (18) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் பொதுவான...
- Advertisement -spot_img